தேனீ வளர்ப்பை துவக்க சரியான நேரம் இதுதான்…. 

 தேனீ வளர்ப்பை துவக்க சரியான நேரம் இதுதான்…. 
தமிழ்நாட்டை  பொருத்தவரையில் டிசம்பரில் இருந்து மார்ச் வரை அதிகமான பூக்கள் பூக்கும் காலமாக உள்ளது…
இதன் மூலம் மகரந்த சேர்க்கை அதிகரிக்கவும் தேன் எடுத்து வியாபாரம் செய்யவும் சரியான காலம் இதுதான் ….
ஒவ்வொரு வருடமும் போதிய தேனீக்கள் இல்லாமல் இந்தியாவில் 3000 கோடி ரூபாய் மகசூல் இழப்பு ஏற்படுகிறது என வல்லுனர்கள் கணக்கிட்டுள்ளார்கள் .
ஒரு வீட்டில் அல்லது ஒரு தோட்டத்தில் தேனீ வளர்க்கும் போது அந்த தேனீக்கள் அங்கு உள்ள பூக்களில் மதுரம் எடுக்கிறது .அப்பொழுது ஆண் பூவிலுள்ள மகரந்தம் தேனீயின் உடம்பில் உள்ள ரோமத்தில் ஒட்டி கொள்கிறது, அடுத்து அது பெண் பூவில் சென்று அமரும் போது அதன் ரோமத்தில் இருக்கும் மகரந்தம் பெண் பூவில் உள்ள சூல்முடி யை சென்று சேர்வது தான் மகரந்த சேர்க்கை என்கிறோம் .
தேனீ வளர்ப்பதினால் மகரந்த சேர்க்கை மூலம் 40% முதல் 80% உற்பத்தி அதிகரிக்கும் . அயல் மகரந்த சேர்க்கையில் இந்தியாவில் 66.6% பயிர்கள் தேனீக்களைத்தான் நம்பியிருக்கிறது.தேனீ வளர்பதின் மூலம் மகசூல் அதிகமாகும் பயிர்கள்
பழவகைகள்
ஆப்பிள், எலுமிச்சை , திராட்சை , கொய்யா, சப்போட்டா, மா , பப்பாளி , முந்திரி, பேரிக்காய், பிளம்ஸ் , லிச்சி , பாதாம்.
எண்ணெய் வித்துக்கள் 
தென்னை , கடுகு , சூரியகாந்தி
காய்கறி பயிர்கள் 
கேரட், வெள்ளரி , வெங்காயம் , முட்டைகோஸ், காலி பிளவர் , நூல்கோல், முள்ளங்கி .
பணபயிர்கள் 
பருத்தி , இரப்பர்
இன்னும் பல…
நண்பர்களே தேனீ வளர்ப்பதன் மூலம் நமக்கு சுத்தமான தேன் கிடைக்கிறது , அதுமட்டுமல்ல உற்பத்தி அதிகமாகி விவசாயிக்கு லாபமும் சந்தையில் விலை மலிவாகவும் கிடைக்கிறது. எங்களிடம் தேனீ வளர்ப்பு இலவச பயிற்சியும் , தேனீ வளர்ப்பு பெட்டிகள் (தேனீக்களுடன்) மற்றும் அனைத்து வகை உபகரணங்களும் கிடைக்கும்.
மற்றும் எங்களிடம் சுத்தமான  கொம்புத் தேன், முருங்கைத் தேன், வேம்புத் தேன் , பண்ணைத் தேன் கிடைக்கும்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...