ரூ.35 கோடி இழப்பு -தெற்கு ரயில்வே தகவல்..! | நா.சதீஸ்குமார்
மிக்ஜாம் புயலால், ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், 35 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டனர்.
தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. அரசு அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என பலரும் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பல இடங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.
இந்நிலையில், மிக்ஜாம் புயலால், ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், 35 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. புயல் காரணமாக, சென்னையில் இருந்து புறப்படும் மற்றும் வெளியூர்களில் வரும் ரயில்கள் இரண்டு நாட்கள் ரத்து செய்யப்பட்டன. புறநகர் மின்சார ரயில்களும் 3 நாட்களும் இயக்கப்படவில்லை. இந்நிலையில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் , 35 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.