காவேரி நதி நீர் பிரச்சனை-முட்டாளின் அரசியல்
காவேரி நதி நீர் பிரச்சனை-முட்டாளின் அரசியல் _1
காவேரி நதி நீர் பிரச்சனை தமிழகத்தின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் பிரசைனயாக உள்ளது .அரசியல் கட்சிகள் ஒட்டு வங்கியை மனதில் வைத்துக் கொண்டு காட்சிகளை நகர்த்தி கொண்டு இருக்கின்றன .
இந்துக்களால் இன்று புனிதமாக கருதப்படும் கங்கை விட காவேரி உயர்ந்த நதியாக இலக்கியங்கள் வரையறுக்கின்றன .
கருநாடக குடகு மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் காவேரி குடகு ,ஹாசன் ,மண்டியா பெங்களூரு ,வழியாக தமிழ் நாட்டிற்குள் காலடி வைக்கிறது .
இயற்கை வளத்தை தாலாட்டும் சீதனமாக வரும் காவேரி தமிழகத்தில் தருமபுரி, சேலம் நாமக்கல் ,திருச்சி தஞ்சாவூர் ,போன்ற மாவட்டங்களை குளிர்வித்து விட்டு பூம்புகார் என்ற இடத்தில பொன்னி என்ற பெயரில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறாள் .
காவேரி என்னும் இளைய மகள் நடைபயிலும் ஒவ்வொரு இடமும் பசுமை போர்த்திய அழகு கலை ஓவியமாக மாறிவிடும் .நீரின் மீசை தாலாட்டில் நில காதலன் மீது கலவி நடத்தும் காவேரி ஒரு அற்புத இயற்கை வர பிரசாதம் ..
உலக சட்டதிட்டத்தில் வரைமுறை ஓன்று உண்டு ஒரு நதி பூமியில் எழில் நடை போடுவதற்கு நாடோ ,மாநிலமா .ஒரு இனமோ சொந்தம் கொண்டாட முடியாது .
இந்தியாவும் ,பாகிஸ்தானும் அந்த புரிந்துணர்வில் சிந்து நதியை பங்கிட்டு கொண்டு உள்ளன .காவேரிக்கு மட்டும் ஏன் இந்த பிரச்சனை? ..தமிழர்களை நசுக்கி அழிக்க வேண்டும் என்ற வட இந்திய தலைவர்கள் மனதில் கொண்ட வெறியின் உச்சமா..?
காவேரியை விவசாயத்திற்கு பயன்படுத்த முதன் முதலாக பிள்ளையார் சுழி போட்டவன் கரிகாலன் என்ற தமிழ் மன்னன் .கி.பி இரண்டாம் நூற்றாண்டில் தமிழ் மக்கள் வளம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கல்லணை ஒன்றை கட்டி பெரும் புரட்சியை செய்தான்
தமிழ் இலக்கியத்தில் அதிகம் இடம் பிடித்த . வீரன் அவன் .காவேரி நீரின் மிசை தமிழ் வளம் காண்பதை கருநாடக மக்கள் நட்புடன் பார்த்தனர் .அக மகிழ்வோடு கரிகாலனின் செயலை பாராட்டினர்
ராசராசன் காலத்தில் காவேரி நீர் விடயத்தில் பிரச்சனை ஓன்று முளைத்தது .கி.பி. 1143 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மைசூரை ஆண்டு கொண்டிருந்த போசள மன்னன் காவேரியில் அணை ஒன்றை கட்டுவித்து தமிழகத்திற்கு தண்ணீர் வாராமல் பார்த்துக் கொண்டான் .விடயம் ராசராசன் காதுகளுக்கு போன போது.படை எடுத்து சென்று அணை உடைத்து தண்ணீரை மீட்டான் .அவன் தமிழர் நலம் சார்ந்த அரசியல் வாதியாக இருந்தான் .ராசராசன் எடுத்த நடவடிக்கையால் அதன் பின் தமிழக்த்திற்கு காவேரி நீர் வரத்து குறைவில்லாமல் இருந்தது
.சோழ நாட்டை ராணி மங்கம்மாள் ஆட்சி செய்து கொண்டிருந்த பதினேழாம் நூற்றாண்டில் மீண்டும் இது போல சர்ச்சை ஓன்று எழுந்தது .
கருநாடக மன்னனான தேவ மகராயர் காவேரி குறுக்கே அணை கட்டி சோழ மண்டலத்தின் நீர் வரத்தின் மீது கை வைத்தான்
ராணி மங்கம்மாள் வெகுண்டு எழுந்து படையோடு சென்று அணை உடைத்து நீர் வரத்தை சரி செய்ய எண்ணிய வேளையில் இறை கதவை திறந்தான் .
அடைமழையின் காரணாமாக அணை உடைந்திட சோழ மண்டலம் நீரின் தாலாட்டில் இன்பம் கண்டு மயங்கியது ..ராணி மங்கம்மாள் காலத்தில் எழுந்த இந்த பிரச்சனை அப்போது நிவிர்த்தி ஆனாலும் ,அதன்பின் குடைச்சல் ஆரம்பித்தது ..
காவேரி நீரை தமிழகத்திற்கு கொடுக்க கூடாது என்பதில் மைசூர் மாகாணம் தெளிவாக திட்டம் வகுத்து செயல் பட ஆரம்பித்தது .இதானால் பிரச்சனைகள் தொடர ஆரம்பித்தன .நீர் கேட்டு போரிடும் நிலைமைக்கு சென்னை மாகாணம் தள்ள பட்டது
வெள்ளையர்கள் இந்தியாவை ஆள ஆரம்பித்த காலத்தில் காவேரி நதி நீர் பிரச்சனை இரு மாகாணத்திற்கு தலைவலியாக மாறியது .1892 ஆம் ஆண்டு
சென்னை மாகாணமும் .மைசூர் மாகாணமும் காவேரி பிரச்சனைக்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடன்படிக்கை ஒன்றை நிறைவேற்றியது .
“சென்னை அரசின் முன் அனுமதியின்றி மைசூர் அரசு புதிய அணை அல்லது பாசன விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்பது தான் அந்த உடன் படிக்கை. வெள்ளை காரனுக்கு இருந்த ஞானம் இன்று இந்தியர்கள் என்ற போர்வையில் ஆளும் தேசிய கட்சிகளுக்கு இல்லாமல் போனது .காங்கிரசையும் சேர்த்துதான் ..
1892 ஆம் ஆண்டு போடபட்ட இந்த உடன் படிக்கை 1974 ஆம் ஆண்டு காலாவதி ஆனது . அம்போது ஆட்சியில் இருந்த கருணாநிதி செய்த துரோகத்தால் தமிழின் வாழ்வாதார உரிமை வழக்கு மன்றம் வரை போகும் நிலைமைக்கு தள்ள பட்டது .
தமிழ் இனமே …..நீ உன்னை அறிந்து கொள்ள வேண்டிய நேரம் இது .
“எதிர்காலத்தில் ஆட்சிகளை நிர்ணயிக்கும் சக்தியாக தண்ணீர் செயல்படும். உலகப்போர்கள் தண்ணீருக்காக நடந்தேறும்.’ என்றான் ஜான் கிராண்ட். இந்திய இறையாண்மை என்ற பெயரில் உன்னை களப்பலியாக் நிறுத்தி விட்டது .இன்னும் நீ தேசிய கட்சிகளை நம்பி கொண்டு இருந்தால் ..நாளை தமிழ் நாடு அரசியல் கடற்கோளில் காணாமல் போய்விடும்
கைத்தடி முசல்குட்டி