சிவாஜி எனும் கஞ்சன் – மணி மண்டபம் என்ற பெயரில் கூண்டுக்குள் சிவாஜி சிலை
சிவாஜி எனும் கஞ்சன் – மணி மண்டபம் என்ற பெயரில் கூண்டுக்குள் சிவாஜி சிலை
மெரினா கடற்கரையில் சிவாஜிக்கு சிலை ஏன் ? குஜராத் காந்தியின் நிழலை சிவாஜி சிலை மறைக்கிறது என தேசிய கட்சி கூக்குரல் யிட்ட போது தமிழன் அமைதி காத்தான் .அவனுக்கு சிவாஜியை கஞ்சனாக அடையாளம் காட்டி வைத்திருந்தத்தார்கள் .
திராவிடமும் ,தேசியமும் எங்களுக்கு வேண்டாம் ,தமிழியம் போதும் என தமிழ் நாட்டில் இன்று பலர் மனதளவில் சொல்வதின் உள்ள அர்த்தம் என்ன என ஆராய்ந்தால் பல உண்மைகள் தெரியும் .
தமிழன் இந்த உலகின் முதல் குடி என்பதை வரலாறு பதிவு செய்து உள்ளது . அறிவுசார்பு விடயங்களில் தமிழன் உலகை ஆட்டிப்படைக்கும் சக்தியாக இன்றுவரை உள்ளான் .இது தேசியவாதிகளுக்கும்.திராவிடம் பேசுவோருக்கும் பிடிக்காத விடயம் .தமிழனை அழிக்க எந்த ஆய்தத்தையும் இந்த கூட்டங்கள் எடுக்கும் .சிவாஜி தமிழின் ஆளுமையாக வளர்ந்தபோது ஜீரணிக்கமுடியாத திராவிடமும் .தேசியமும் சிவாஜிக்கு எதிராக எடுத்த ஆய்தம் கஞ்சன் .
தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராக இருந்த கக்கன் தேசிய கட்சியில் மந்திரியாக இருந்தார் .இன்றைய திராவிட , தேசிய தலைவர்களை போல மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் உக்தி கக்கனுக்கு தெரியவில்லை .பாவம் நேர்மையான அரசியல்வாதியாக பிழைக்க தெரியாத கக்கன் வாழ்ந்து தொலைத்தார் .
கக்கனின் கடைசிகாலம் சோதனை காலமாக இருந்தது .நல்லவர்களை எந்த இறை முன் நின்று காத்து இருக்கிறது .கக்கனை காக்க, . தேசிய கட்சி கக்கனை தெரியாத கட்சிபோல நடந்து கொண்டது .அது அக் கட்சியின் பிறவி குணம் .கக்கன் நிலை அறிந்த சிவாஜி ..மனதுக்குள் தனக்குத்தானே ஒரு கணக்கு போட்டு கொண்டார் , நிகழ்வில் ஒன்றில் தனக்கு கிடைத்த தங்க சங்கிலியை சிவாஜி ஏலம் இட்டார் சபையில் இருந்தோருக்கு அதிர்ச்சி .எதற்காக சிவாஜி தங்க சங்கிலியை ஏலம் இடுகிறார் ?…வியப்போடு பார்ததனர்..
சிவாஜி விழா நடைபெறுவதற்கு முன் விழா ஏற்பாட்டாளர்களிடம் நான் நடிக்கும் இந்த நாடகத்திற்கு எனக்கு சம்பளம் எதுவும் வேண்டாம் அதுப்போல என் சார்பு உடையவர்களுக்கும் நீங்கள் எதுவம் தர வேண்டாம் ..எனது நண்பர்கள் சார்பில் ஏற்பாடு செய்து இருக்கும் தங்க சங்கிலியைய் மேடையில் அன்பளிப்பாக தாருங்கள் என பணித்து இருந்தார் .
ஏலம் இட்ட தங்க சங்கலி ஐம்பதாயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது .அந்த பணத்தை சிவாஜி யாரிடமும் கொடுக்காமல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த செங்குட்டு வேலோன் நடத்தி வந்த ஈரோடு நிதி நிறுவனத்தில் வைப்பு தொகையாக கக்கன் பெயரில் முதலீடு செய்தார் . அந்த முதலீடு பத்திரத்தை கக்கனிடம் கொடுத்தார். மாதம் மாதம் இப்பணத்தில் இருந்து கிடைக்கும் வட்டியில் இருந்து கக்கனின் செலவுகளை செய்ய வழி செய்தார் .சத்தியமாக சிவாஜி இதை பத்திரிகளையில் முழுப்பக்கம் விளம்பரம் கொடுத்து வள்ளல் என்று தம்பட்டம் அடிக்கவில்லை ;
செய்த நலன்களை சுய விளம்பரம் செய்யாத சிவாஜி கஞ்சன்தான் ..அந்த தமிழனுக்கு மக்கள் பார்வையில் படும்படி சிலை வைத்தது தவறுதான் .தேசியமும் திராவிடமும் சேர்ந்து ஒரு தமிழனின் சிலையை கூண்டுக்குள் வைத்து விட்டது .
தமிழ் பிறப்புகள் அல்லாதவர்களின் பிறந்தநாள் கொண்டங்களுக்கு என்று கோடிகோடியாக செலவு செய்து மக்கள் வரி பணம் வீணடிக்கப்பட்டுவிட்டது .சமாதிகள் அலங்காரம் என்ற பெயரில் கோடிகள் ஒதுக்க பட்டு விட்டது . தமிழின் ஆளுமைகள் மட்டும் கேட்கநாதியின்றி கேலி செய்யப்படுகிறது .
காவேரி நதி நீர் பிரச்சனை ஈழ பிரசனனை , தமிழக வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை .நெடுவாசல் போராட்டம் , தூத்துக்குடி காப்பர் ஆலை என தமிழன் எல்லா விடயத்திலும் வஞ்சிக்க பட்டு கொண்டு இருக்கிறான் .அதில் சிவாஜி சிலையும் அடக்கம் .
வாழ்க தேசியம் தமிழனை கொன்று வாழ்க தேசியம்