கருப்பு நிலவன் காமராஜர்
இது
புகழ் பாட்டு
புகழவேண்டிய பாட்டு
கருப்பு நிலவன்
தியாயகத்தை
கவிதையில் சொல்லும்
இது காதல் கலந்த
புகழ் பாட்டு ..
சமுத்திரத்தின்
மேனியில்
உறவாடி கலக்கும்
முகில் போல
என் பாட்டு
கருப்பு நிலவனை
புகழ்ந்து நிற்கும் …
காதலியின் கரு
காதல் அல்ல ..
உண்மைக்கும்
பொருத்தும் ..
காமராஜர் என்ற
கற்புக்கும் பொருத்தும் ……
கருப்பு நிலவன்
தும்பை வெள்ளை
வேட்டி கட்டி வந்தால்
தமிழ் நாடு எனும்
காதலி வெட்கத்தில் சிவப்பாள்….
அவன் விழி அசைந்தால்
வானமும்
வசப்படும் …
நேர்மை என்பான்
வாய்மை என்பான்
தாய்மை என்பான்
தமிழன் என்பான்
ஆபரணமில்லை
அலங்காரமில்லை
பகட்டு இல்லை
ஆயினும்
அவன்
அழகு ……
நம்பி அவனுடன்
பயணம் போனதால்
தமிழக நெஞ்சு
நிமிர்ந்த்து ….
நமக்காக நின்றான் ..
துன்பம் வந்தாலும்
சத்தியத்தை காத்தான்
சுயநலம் போல் காட்டி
பொது நலத்தை வாழ்வித்தான்
அணைகள் வந்தது
தொழில்கள் மலர்ந்தது
கல்வி சிரித்தது
கழனி களித்து
..
தமிழகத்தின் எல்லை சாமியாய்
தாழ்ந்தோரின் விடி வெள்ளியாய்
காந்தியின் நிழல் வடிவமாய்
சத்தியத்தின் தனி உருவமாய் சிரித்தான் ….
கதர் கூட்டத்தில்
கசங்கிய அவன்
தமிழ் கூட்டத்தில்
கலந்து இருந்தால்
தரணி அவன் காலடியில்
அரசியல் கற்று இருக்கும் ….
தேசியத்தை நம்பி
தனனை அழித்தான்
தேசியம் அவனை
திராவிடத்திடம் விற்றது …
எவருக்கும் கிடைக்க
பொக்கிசம் …
அவனை
தமிழ் பாடும்
தமிழன் பாடுவான்
எம் இனத்தின்
காதல் மொழி அவன்
இன்பா