மு.க.ஸ்டாலின் கண்டனம்

 மு.க.ஸ்டாலின் கண்டனம்

மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: அண்ணா பல்கலை பாடத்திட்டத்தில் சமஸ்கிருத திணிப்பு முயற்சிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.   திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கீழடி அகழாய்வுகள் குறித்தும், அண்ணா பல்கைலைக்கழக 2019ம் ஆண்டிற்கான பாடத்திட்டத்தில் ‘சமஸ்கிருதம்’ திணிக்கப்படும் முயற்சிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், நேற்று தனது டிவிட்டர் பதில்  கூறியிருப்பதாவது:  கீழடி அகழாய்வுகள் வெளியாகி, தொல்தமிழர்களின் திராவிடப் பண்பாட்டின் தொன்மையையும் பெருமையையும் உலகம் அறிந்துள்ள நிலையில், தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதை உணர்ந்து, பல்கலைக்குப் பொறுப்பு வகிக்கும் ஆளுநரும்,  உயர்கல்வித்துறையும் இந்தப் பண்பாட்டு ஆதிக்கப் பாடத்திட்டத்தை மாற்றிட வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தின் சிஇஜி கேம்பசில் 2019ம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில், தத்துவப் பாடம் கட்டாயமாக்கப்பட்டு, அதில், ‘இந்திய – மேல்நாட்டு  தத்துவப் படிப்பு’ என்ற பெயரில் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...