*நமக்கும் சுரக்கும் அமிர்தம் பற்றிய ரகசியம்*

சித்தர்கள் மிகப் பெரிய விஞ்ஞானிகள். யோகத்தால் ஞானமடைந்து, ஞானத்தால் உண்மையை உணர்ந்தவர்கள். உணவே இல்லாமல் உயிர் வாழ முடியும் என்று வாழ்ந்து காட்டியவர்கள். பல நாட்கள் உணவே இல்லாமல் தவம் செய்து பேரானந்தத்தை அனுபவித்தனர். அது எப்படி? நவீன உடலியல் உமிழ் நீரானது வாய், கன்னம் ,தாடை, போன்ற வாய் பகுதியில் சுரப்பதாகச் சொல்கிறது. அது எங்கே சுரந்தாலும் அதற்கு அடித்தளமாக இருந்து அதைஅதிகமாகச் சுரக்கச் செய்வதும், கட்டுப் படுத்துவதுமான வேலைகளைச் செய்வது எது என்றால் *பிட்யூட்டரி சுரப்பியே* ஆகும். இதை சித்தர்கள் கண்டுபிடித்தனர். இந்த *உமிழ்நீரைத்தான் அவர்கள் காயப்பால்* என்று சொல்வார்கள். என்னடா இது எச்சிலைப் போய் பெரிதாகப் பேசுகிறானே என்று நினைக்காதீர்கள். *எச்சில் வேறு உமிழ்நீர் வேறு.* *எச்சிலானது நாறும். உமிழ்நீர் நாற்றமடிக்காது.* இது எப்பொழுதாவது நமக்கு வாயில் ஊறும். டாக்டர் ஊசி போடுவதற்கு முன் பீய்ச்சி அடிப்பாரே, அது போல சுரந்து அடிக்கும். வெட்டவெளியாகிய சிரசில் ஊறுவது, தன்னை உண்பவரின் பசியை போக்குவது. ஆட்டுப்பால், மாட்டுப்பால் போல காயப்பால் நாற்ற மடிக்காது, என்று சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள். *தேவலோகத்திலும் இதைப்போல் பாலில்லை. இது நம்மை இறவாமல் காக்கும் அமிர்தமாகும். யோகிகள் இதை நாள்தோறும் உண்டிருப்பர். சாதாரணமாக இது தொண்டை வழியாக உள்ளே சென்று அக்னியில் விழுந்து போகும். அவ்வாறு விடாமல் நாக்கை மடித்து வாயால் நன்கு சுவைத்து நெடுநேரம் இருத்தி உண்ணவேண்டும். அப்படி உண்பவர்களுக்கு காயசித்தி ஏற்படும். உடலுக்கு அதிக சக்தி கிடைக்கும். நீண்டநாள் வாழலாம்.* *ப்ராணாயாமத்தால் பிட்யூட்ரி சுரப்பியை நன்றாகச் சுரக்கச் செய்யமுடியும்.* *ஊறு மமிர்தத்தை யுண்டி யுறுப்பார்க்கில்* *கூறும் பிறப்பறுக்க லாம்.* *- ஔவையார்.* *இந்த உமிழ்நீரில் ஸ்டார்ச் இருக்கிறது.* தாவரங்கள் இந்த ஸ்டார்ச் மூலமாகத்தான் தேவையான உணவை தயாரித்துக் கொள்கின்றன. அதற்க்குச் சூரிய ஒளியும் நீரும் இருந்தால் போதும். சித்தர்களும் இந்த வழிமுறையையே பின்பற்றி இருக்கிறார்கள். உமிழ்நீரில் இருந்து ஸ்டார்ச்சை பெற்ற உடல் அதன் உதவியோடு சூரிய ஒளியில் இருந்து உடலுக்குத் தேவையான சக்தியை தயாரித்துக் கொள்ளும். ப்ராணாயாமம் செய்தால் காயப்பால் அதிகம் சுரக்கும். *எப்பொழுதும் துப்பிக் கொண்டே இருப்பவர்களுக்கு எப்பொழுதாவது சுரக்கும் இந்த உமிழ்நீரின் சக்தி கிடைக்காமலே போய்விடுகிறது.* சித்தர்கள் உணவை நன்றாக மென்று அரைத்து நீர்போலாக்கி சாப்பிடச் சொன்னார்கள். அப்படிச் சாப்பிடும்போது உமிழ்நீர் சுரந்து உணவுடன் கலந்து நமக்கு பலம் கிடைக்கும். நீரை மெதுவாகச் சாப்பிடுவது போலக் குடிக்கச் சொன்னார்கள். அப்படிக் குடிக்கும் போது உமிழ்நீர் நீருடன் கலந்து நமக்கு நல்ல பலன் தரும். ஆச்சரியமாக இருக்கிறதல்லவா ! உமிழ் நீருக்கு சுவையா என்று. ஆம். நன்கு கவனித்து பாருங்கள். ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதன் தன்மையை உற்று நோக்கி, பல இன்னல்களை சரி செய்து கொள்ள முடியும். வாய் துர்நாற்றம் முதலில்? உடலின் உள் உறுப்புகளில் ஏற்படும் ஆபத்தான புண்கள்/ கட்டிகள் வரை அனைத்தையும் சரி செய்யும் வல்லமை உமிழ் நீருக்கு உண்டு. சரி, நாம் செய்ய வேண்டியது என்ன… வழக்கம் போல, உடல் (உமிழ் நீர்) சொல்வதை கேட்பது தான்……… அனுபவத்தில், நல்ல தூய நீர்போல சுவைக்கும் உமிழ் நீர் இருந்தால் உடல் நன்றாக உள்ளது என்று பொருள். சில நேரம் புளிப்பாக, கசப்பாக இருக்கும். அந்த நேரங்களில், உணவை, முக்கியமாக சமைத்த உணவை தவிர்த்து, நல்ல பழங்கள் அல்லது நீர் அருந்தினாலே போதுமானது. அடுத்த வேளைக்குள்ளாக அந்த சுவையுணர்வு மாறி விடும். பசி உணர்வு அறிந்து உணவு உண்ண இயலாதவர்கள், உமிழ் நீரின் சுவை உணர்வு அறிந்து அதற்கேற்றார் போல் உணவு உண்ணலாம். பூச்சி மருந்துகள், இராசாயன உரங்களுக்கு பயந்து பழங்களை தவிர்ப்பவர்களுக்கு ஒரு செய்தி. அதிக பட்சம் 10% இரசாயனம் என்றாலும் கூட, மீதி 90% இயற்கை பழங்களில் உள்ளது. அதை தவிர்த்தால், பிறகு 100% இரசாயனம் கொண்ட மருந்துகளை உண்ண நேரிடலாம்…. எச்சிலைத் துப்பாதீர் என்ற வாசகம் தாங்கிய பலகைகளை நாம் பல இடங்களில் பார்த்திருப்போம். எச்சில் என்பது வாயில் ஊறும் உமிழ்நீர். அது உணவை செரிப்பதற்கும், வாயின் உள்பகுதியையும், தொண்டைக் குழியையும் ஈரப்பதமாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது. உடல் என்னும் வீட்டில் இருக்கும் ஒன்பது வாசல்களில் வாயும் ஒன்று. இது உணவை உண்பதற்கும், பேசுவதற்கும் பயன்படுகிறது. உமிழ்நீரை வெளியில் துப்புதல் ஆகாது என சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை கூறுகின்றனர். புளிப்பு, இனிப்பு இவற்றின் சுவையை உணர்ந்தால் வாயில் உமிழ்நீர் தானாக ஊறும். அதுபோல் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகின்ற உணவுகளை சாப்பிட்டாலும் உமிழ்நீர் அதிகம் சுரக்கும். உடலில் உமிழ்நீர் சுரப்பிகள் மூன்று ஜோடிகள் உள்ளன. *1. பரோடிட் சுரப்பி* *2. சப்மாண்டிபுலர் சுரப்பி* *3. சப்லிங்குவல் சுரப்பி* *பரோடிட் சுரப்பி* ******************** இது காதுகளுக்குக் கீழே அமைந்துள்ளது. இதன் நாளங்கள் வழியாக கன்னங்களின் உட்புறம் இரண்டு மேல் கடவாய் பற்களுக்கு மேல் இந்த சுரப்பு நாளங்களின் துவாரங்கள் உள்ளன. இந்த நாளங்களுக்கு ஸ்டென்சன்ஸ் நாளங்கள் என்று பெயர். இது மனித உடலில் நீர் வறட்சி ஏற்படும்போதெல்லாம் அதிகம் சுரந்து வறட்சியைக் குறைக்கிறது. *சப்மாண்டிபுலர் சுரப்பி* **************************** இது பரோடிட் சுரப்பிகளுக்குக் கீழே அமைந்துள்ளது. இதன் நாளங்கள் நாக்கின் அடிப் பகுதியில் துவாரங்களாக அமைந்துள்ளன. *சப்லிங்குவில் சுரப்பி* *************************** கன்னங்களின் உள்ளே இரண்டு பக்கங்களிலும் அமைந்துள்ளன. இதன் துவாரங்கள் வாய் முழுவதும் அமைந்துள்ளன. *உமிழ்நீரின் தன்மைகள்* ****************************** உமிழ்நீர் காரத்தன்மை கொண்டது. இது அதிக என்ஸைம்களைக் கொண்டது. இதில் ஆண்டிபயாடிக் அதிகம் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. உமிழ்நீர் சராசரியாக ஒரு மனிதனுக்கு 1500 மி.லி. அளவு சுரக்கிறது. இந்த அளவு உண்ணும் உணவின் அளவைப் பொறுத்தும் மன எண்ணத்திற்கும் ஏற்றவாறு மாறுபடுகிறது.. உமிழ் நீரின் முக்கிய பணி சீரணமாக்குவது.நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது பழமொழி. நொறுங்க என்பது நன்றாக மென்று என்று பொருள். உணவை நன்கு மென்று சாப்பிட்டால் நோயின்றி நூறுவயதுக்கு மேல் வாழலாம் என்று கூறுகின்றனர். உணவை மெல்லும்போது உமிழ்நீர் உணவுடன் நன்கு கலந்து அதில் உள்ள என்சைம்கள் உணவின் நச்சுத்தன்மையைப் போக்கி உணவுக் குழலுக்குச் செல்ல ஏதுவாகிறது. மேலும் இதில் கலந்துள்ள நொதி பித்தத்துடன் சேர்ந்து உணவை எளிதில் சீரணிக்க உதவுகிறது. பொதுவாகவே அஜீரணம், வாந்தி, தலைச்சுற்றல் உண்டானால் கூட உமிழ்நீர்தான் அதிகம் சுரந்து உடலை சீர்படுத்துகிறது. வாய்ப்புண்ணை ஆற்ற உதவுவதும் உமிழ்நீர்தான். உமிழ்நீர் சுரப்பியின் அளவு குறைந்தாலும்,அதிகரித்தாலும் கடினத் தன்மை அடைந்தாலும் அது நோயின்அறிகுறியாகும். சிலர் பாக்கு புகையிலை மற்றும் போதைவஸ்துக்களை உபயோகிப்பார்கள். அதுஉமிழ்நீருடன் சேர்த்து விஷநீராகி உடலைக்கெடுக்கிறது.

மதக் கோட்பாடுகளில் விரதம் இருக்கும் காலங்களில் உமிழ்நீரை விழுங்காமல் வெளியே துப்பிவிடுவார்கள். இந்த உமிழ்நீரானது உள்ளே சென்றால் அதிகமாக பசியைத் தூண்டும் என்ற காரணத்தால் விரத காலங்களில் உமிழ்நீரை விழுங்குவதில்லை. ஆனால் இத்தகைய சிறப்பு வாய்ந்த உமிழ்நீரை சிலர் தங்களுக்குப் பிடிக்காதவர்களை அவமானப் படுத்துவதற்காக வெளியே துப்புவார்கள். உமிழ்நீர் என்பது அடுத்தவரை அவமானப்படுத்தும் நீர் அல்ல. அது நம்மை நோயின்றிகாக்க சுரக்கும் அமிர்த நீராகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!