அம்மா “வேதா கோபாலன்” அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!

 அம்மா “வேதா கோபாலன்” அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!

அத்தனை எழுத்துக்களும் 
தங்களிடம் தஞ்சமடைய, 
தங்களை வாழ்த்த ஓர் வரி
என்று எண்ணத்திடம் எத்தனிக்க,
வாழ்த்தும் நெஞ்சமிருக்க 
வார்த்தைக்கு பஞ்சமில்லை
வந்து விழுகிறது 
தங்கள் ஆசிப்பெற 
மொத்த தமிழுமே..!

தங்கள் அனுபவங்களை 
எழுதிச் சிந்தும் பேனாவின் 
மை வெறும் மையல்ல உண்மை
தங்கள் பிறப்பால்
பெருமைக் கொள்கிறது பெண்மை

மூப்பென்பது உடலுக்கே அன்றி 
உணர்வுக்கல்ல என்பதை உணர்த்தும்
உங்கள் எழுத்துக்களின் கண்ணியம்,
தங்களின் சமகாலத்தில் பயணிப்பது
நாங்கள் செய்தப் புண்ணியம்..

நீங்கள் பிறந்த இந்நாள் 
அது நன்னாள் 
என சொன்னால்
அது மிகையாகாது,

தாங்கள் கடக்கும்
ஒவ்வொரு ஆண்டும் நல் ஆண்டு.,
வாழ்க நீர் பல்லாண்டு..! 
மின்கைத்தடி யின் இந்த வாழ்த்தை
வாசித்துப் பாருங்கள்..,
தங்கள் பிறந்தநாளில் 
எங்களுக்கும் ஆசிக்கூறுங்கள்..!

சதீஸ்

1 Comment

  • நன்றி சொல்ல வார்த்தை இல்லை. இன்றைக்கு எனக்கு வந்த வாழ்த்துகளிலேயே இதை மிகவும் ஸ்பெஷலாகக் கருதுகிறேன். மின் கைத்தடிக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்.

    நன்றி நன்றி நன்றி
    வாழ்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...