பிக்பாஸ் விதிகளை மீறும் மாயா பூர்ணிமா…! | தனுஜா ஜெயராமன்
பிக் பாஸ் சீசன் 7 தொடங்கியதிலிருந்தே சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் பஞ்சமில்லை. எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கிண்டல் கேலிகள் , 18 ப்ளஸ் அடல்ட் கண்டெண்ட், பாலியல் சீண்டல்கள் அத்துமீறல் புகார்கள், உருவ கேலி உள்ளிட்டவை தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மாயா மற்றும் பூர்ணிமா செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் விமர்சனங்களையும் சர்ச்சையையும் உண்டாக்கி வருகின்றது. 18 போட்டியாளர்களுடன் கடந்த மாதம் துவங்கிய இந்த சீசனில் பல சண்டைகள் விவாதங்கள் என பல விஷயங்கள் அரங்கேறிவிட்டது. பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலே முதல் முறையாக ஒரு போட்டியாளரால் விமன் சேப்டி இல்லை என சொல்லி ரெட் கார்டு வழங்கப்பட்டு அவரை வீட்டை விட்டு வெளியேற்றியது பிக் பாஸ் டீம் மற்றும் கமலஹாசன்.
மாயா பூர்ணிமா இருவரும் அத்துமீறி இஷ்டம் போல பேசுவதும், 18 ப்ளஸ் ஜோக்குகளை உதிர்ப்பதும், விதிமீறல்கள் செய்வதும் வழக்கமாகவே ஆகிவிட்டது. மாயா பூர்ணிமா இருவரும் எந்த விதிகளையும் மதிப்பதில்லை.. பிக்பாஸ் டீம் மற்றும் கமலஹாசன் உட்பட யாரையும் சட்டை செய்வதுமில்லை.
பிக்பாஸில் வழக்கம் போல நேற்றும் விதிமீறல்கள் நடந்தது. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் மைக்கை கழட்டிவிட்டு மறைவான இடத்திற்கு சென்று பேசியுள்ளனர். இதையடுத்து பிக் பாஸ் அவர்களை மூன்றுமுறை கண்டித்து மைக்கை மாட்டும்படி கூறியுள்ளார்.
எனவே இந்த வாரமாவது கமல் மாயா மற்றும் பூர்ணிமாவை கண்டிப்பாரா? என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.