ஆஸ்கார் விருதுக்கு தேர்வான மூன்று தமிழ்படங்கள்
ஆஸ்கார் விருது உலகின் மிகப்பிரம்மாண்டமான விருது ஒரு சமுதாயத்தின் பல்வேறு விஷயங்களை வெளிப்படுத்தும் சாதனம் சினிமா. பொழுதுபோக்கு, ஆக்ஷன், ஜனரஞ்சகம், உண்மை, அலசல் என்று எல்லா அம்சங்களையும் தொட்டு வரும் காற்றுதான் சினிமா.
சினிமாவின் அத்தனை நடிகர்களுக்குமே ஆஸ்கார் விருது ஒரு கனவுதான் பலரின் லட்சியம் அதை நோக்கிப் பயணிப்பதாக மட்டுமே இருந்தது. இந்த வருடமும் தமிழ்படங்கள் சில ஆஸ்காருக்குத் தேர்வாகி உள்ளது. என்னனென்ன படம் என்று பார்ப்போமா
தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த வடசென்னைப் படம். வடசென்னை என்னும் நகரத்தின் இருட்டடிக்கப்பட்ட பக்கங்கள் கட்டியணைக்கும் நீளும் கைகளுக்கு முதுகில் குத்தவும் தெரியும் என்று உணர்த்திய படம். மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
அடுத்தது விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்த சூப்பர் டீலக்ஸ். ஷில்பா என்னும் திருநங்கையின் கேரக்டரில் நடித்திருப்பார் சில சர்ச்சைகளைக் கிளப்பினாலும் படத்தில் அவரின் நடிப்பு மாஸாகவே இருந்தது.
மூன்றாவதாக தேர்வாகியிருக்கும் படம் தான் மிகப்பெரிய ஹைலைட் சென்றவாரம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் ஒத்த செருப்பு. வித்தியாசமான முயற்சி, களம் ஒரே ஒரு கதாப்பாத்திரம் தத்ரூபமாக தன் கதைகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது எனவே இந்த மூன்றும் ஆஸ்கர் நுழைய போட்டியிருக்கிறது மூன்றுமே இயக்குநர்களும், நடிகர்களும் கடுமையாக உழைத்த படம் ஆஸ்காரை அடைய அவர்களுக்கு வாழ்த்துக்கள்