வரலாற்றில் இன்று (10.11.2023)

 வரலாற்றில் இன்று (10.11.2023)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

நவம்பர் 10 கிரிகோரியன் ஆண்டின் 314 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 315 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 51 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1444 – ஹங்கேரி, போலந்து ஆகியவற்றின் அரசன் மூன்றாம் விளாடிஸ்லாஸ் பல்கேரியாவின் வர்னா என்ற இடத்தில் ஒட்டோமான் பேரரசுடன் இடம்பெற்ற சமரில் தோற்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான்.
1520 – டென்மார்க் மன்னன் இரண்டாம் கிறிஸ்டியான் சுவீடனை முற்றுகையிட்டபோது ஸ்டொக்ஹோம் நகரில் பலரைக் கொன்றான்.
1580 – மூன்று நாள் முற்றுகையை அடுத்து, ஆங்கிலேய இராணுவம் கிட்டத்தட்ட 600 திருத்தந்தை நாடுகளின் இராணுவத்தினரையும், பொதுமக்களையும் அயர்லாந்தில் தலைகளைத் துண்டித்துப் படுகொலை செய்தனர்.
1674 – ஆங்கிலேய-டச்சு போர்: வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாட்டின் படி புதிய நெதர்லாந்தை நெதர்லாந்து இங்கிலாந்திடம் ஒப்படைத்தது.
1847 – ஸ்டீவன் விட்னி என்ற பயணிகள் கப்பல் அயர்லாந்தின் தெற்குக் கரையில் மூழ்கியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.
1871 – காணாமல் போனதாகக் கருதப்பட்ட ஸ்கொட்லாந்தின் நாடுகாண் பயணியும் மிஷனரியுமான டேவிட் லிவிங்ஸ்டனைத் தான்சானியாவில் தாம் கண்டதாக நாடுகாண் பயணியும் ஊடகவியலாளருமான ஹென்றி மோர்ட்டன் ஸ்டான்லி அறிவித்தார்.
1887 – ஹே சந்தைக் கலவரத்தின் போது மரண தண்டனை விதிக்கப்பட்ட லூயிஸ் லிங் என்ற தொழிலாளர் தலைவர் லண்டனில் டைனமைட் வெடிக்கவைத்து தற்கொலை செய்து கொண்டார்.
1928 – ஹிரொஹீட்டோ ஜப்பானின் 124வது மன்னரானார்.
1970 – சோவியத்தின் லூனா 17 விண்கப்பல் சந்திரனுக்கு “லூனாகோட்” எனப்படும் தானியங்கி ஊர்தியைக் கொண்டு சென்றது.
1971 – கம்போடியாவில் கெமர் ரூச் படைகள் புனோம் பென் நகரையும் விமான நிலையத்தையும் தாக்கி 44 பேரைக் கொன்று பல விமானங்களை அழித்தனர்.
1972 – பேர்மிங்ஹாமில் இருந்து புறப்பட்ட விமானம் கடத்தப்பட்டு ஹவானாவில் இறக்கப்பட்டது. கடத்தல்காரர்கள் கியூபாவில் கைது செய்யப்பட்டனர்.
1993 – தவளை நடவடிக்கை, 1993: யாழ்ப்பாணத்தில் பூநகரி, நாகதேவந்துறை இராணுவக் கடற்படைக் கூட்டுத்தளம் மீது விடுதலைப் புலிகள் வெற்றிகரமான தாக்குதலை ஆரம்பித்தனர்.
1995 – நைஜீரியாவில் சுற்றுச் சூழல் ஆதரவாளர் கென் சரோ-வீவா என்பவரும் அவரது 8 சகாக்களும் தூக்கிலிடப்பட்டனர்.
1999 – பாகிஸ்தானில் தேசத் துரோகம் மற்றும் சதி செயல்களில் ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.
2008 – செவ்வாய்க் கோளில் தரையிறங்கிய ஐந்து மாதங்களில் பீனிக்சு விண்கலத்துடனான தொடர்புகள் அறுந்த நிலையில் இத்திட்டம் முடிவுக்கு வந்ததாக நாசா அறிவித்தது.

பிறப்புகள்

1483 – மார்ட்டின் லூதர், கிறித்தவச் சீர்திருத்த இயக்கத் தலைவர் (இ. 1546)
1697 – வில்லியம் ஹோகார்த், ஆங்கிலேய ஓவியர் (இ. 1764)
1910 – கொத்தமங்கலம் சுப்பு, எழுத்தாளர், நடிகர் (இ. 1974)
1919 – மிக்கைல் கலாசுனிக்கோவ், ரஷ்யாவின் ஏகே47 இயந்திரத் துப்பாக்கியை வடிவமைத்தவர். (இ. 2013)
1960 – நீல் கெய்மென், ஆங்கிலேய எழுத்தாளர்

இறப்புகள்

461 – முதலாம் லியோ, திருத்தந்தை (பி. 400)
1549 – மூன்றாம் பவுல், திருத்தந்தை (பி. 1468)
1891 – ஆர்தர் ராம்போ, பிரெஞ்சுக் கவிஞர் (பி. 1854)
1938 – முஸ்தாபா கெமால் அத்தாதுர்க், துருக்கிய அரசியல்வாதி (பி. 1881)
1977 – தமிழ்வாணன் தமிழக எழுத்தாளர், இதழாசிரியர். (பி.1926)
1982 – லியோனிட் பிரெஷ்னெவ், சோவியத் யூனியன் தலைவர் (பி. 1906)
2014 – எம். எஸ். எஸ். பாண்டியன், சமூக ஆய்வாளர், பேராசிரியர்

சிறப்பு நாள்

உலக அறிவியல் நாள் (யுனெஸ்கோ)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...