வரலாற்றில் இன்று (31.10.2023)

 வரலாற்றில் இன்று (31.10.2023)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

அக்டோபர் 31  (October 31 ) கிரிகோரியன் ஆண்டின் 304 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 305 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 61 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

475 – ரோமுலஸ் ஆகுஸ்டலஸ் ரோமப் பேரராசன் ஆனான்.
1517 – கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம்: மார்ட்டின் லூதர் தனது 95 கொள்கைகளை ஜெர்மனியின் விட்டன்பேர்க் தேவாலய வாசலில் வெளியிட்டார்.
1803 – கப்டன் ட்றைட்பேர்க் தலைமையில் ஆங்கிலேயப் படைகள் பண்டாரவன்னியனின் படைகளைத் தாக்கினர். பலர் கொல்லப்ப்பட்டனர்[1]
1863 – நியூசிலாந்தில் நிலை கொண்ட பிரித்தானியப் படைகள் “வைக்காட்டொ” என்ற இடத்தில் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து மவோரி போர்கள் மீண்டும் ஆரம்பமானது.
1864 – நெவாடா ஐக்கிய அமெரிக்காவின் 36வது மாநிலமாக இணைந்தது.
1876 – இந்தியாவின் கிழக்குக் கரையில் இடம்பெற்ற மிகப்பெரும் சூறாவளி காரணமாக 200,000 பேர் வரை இறந்தனர்.
1913 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது நெடுஞ்சாலை லிங்கன் நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.
1924 – உலக சேமிப்பு நாள் இத்தாலியின் மிலானோ நகரில் சேமிப்பு வங்கிகளின் உலக அமைப்பினால் அறிவிக்கப்பட்டது.
1931 – தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ் வெளியானது.
1941 – இரண்டாம் உலகப் போர்: ஐஸ்லாந்துக்கு அருகில் அமெரிக்கக் கப்பல் ஒன்றை ஜெர்மனியின் படகு தாக்கி மூழ்கடித்ததில் 100 அமெரிக்கக் கடற்படையினர்   கொல்லப்பட்டனர்.
1941 – இங்கிலாந்தில் தொழிற்சாலை ஒன்று தீப்பற்றியதில் 49 பேர் கொல்லப்பட்டனர்.
1954 – அல்ஜீரியாவில் பிரெஞ்சு ஆக்கிரமிப்புக்கெதிராக அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணி போராட்டத்தை ஆரம்பித்தது.
1956 – ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் சூயஸ் கால்வா யைத் திறக்க வற்புறுத்தி எகிப்தின் மீது குண்டுகளை வீசின.
1961 – ஸ்டாலினின் உடல் மொஸ்கோவில் உள்ள லெனினின் நினைவகத்தில் இருந்து அகற்றப்பட்டது.
1963 – இண்டியானாவில் பனிக்கட்டி சறுக்கல் களியாட்ட விழா ஒன்றின் போது இடம்பெற்ற வெடி விபத்தில் 74 பேர் கொல்லப்பட்டு 400 பேர் காயமடைந்தனர்.
1968 – வியட்நாம் போர்: பாரிஸ் அமைதிப் பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வட வியட்நாம் மீதான அனைத்துத் தாக்குதல்களையும் நவம்பர் 1 இலிருந்து நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் லின்டன் ஜோன்சன் அறிவித்தார்.
1969 – வோல் மார்ட் தொடங்கப்பட்டது.
1973 – அயர்லாந்தில் டப்ளின் நகர சிறை ஒன்றில் இருந்து மூன்று ஐரியக் குடியரசு இராணுவத்தினர் அங்கு தரையிறங்கிய கடத்தப்பட்ட உலங்கு வானூர்தி ஒன்றில் தப்பி வெளியேறினர்.
1984 – இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இரண்டு சீக்கியப் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர் புதுடில்லியில் இடம்பெற்ற கலவரத்தில் சுமார் 2000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
1994 – அமெரிக்க விமானம் ஒன்று கடும் பனி காரணமாக இண்டியானாவில் விபத்துக்குள்ளாகியதில் 68 பேர் கொல்லப்பட்டனர்.
1996 – விமானம் ஒன்று பிரேசிலில் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணஞ் செய்த அனைத்து 98 பேரும் தரையில் 2 பேரும் கொல்லப்பட்டனர்.
1999 – எகிப்திய விமானம் ஒன்று மசாசுசெட்சில் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த 217 பேரும் கொல்லப்பட்டனர்.
2000 – சிங்கப்பூர் போயிங் 747-400 விமானம் தாய்வானில் விபத்துக்குள்ளாகியதில் 83 பேர் கொல்லப்பட்டனர்.
2000 – வடக்கு அங்கோலாவில் தனியார் அண்டோனொவ் விமானம் வெடித்துச் சிதறியதில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
2003 – 22 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் மலேசியப் பிரதம மந்திரி மகதிர் பின் முகமது தமது பதவியைத் துறந்தார்.

பிறப்புகள்

1795 – ஜோன் கீற்ஸ், ஆங்கிலக் கவிஞர் (இ. 1821).
1875 – வல்லபாய் பட்டேல், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1950)
1922 – நொரொடோம் சிஹானூக், கம்போடிய அரசர்
1930 – மைக்கேல் கொலின்ஸ், அமெரிக்க விண்வெளிவீரர்
1933 – துரை இராஜாராம், தமிழக எழுத்தாளர்

இறப்புகள்

1811 – பண்டார வன்னியன், வன்னி மன்னன்.
1975 – எஸ். டி. பர்மன், இந்திய இசையமைப்பாளர் (பி. 1906)
1984 – இந்திரா காந்தி, இந்தியப் பிரதம மந்திரி (பி. 1917).
1986 – ரொபேர்ட் மலிக்கென், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியலாளர் (பி. 1896)
1990 – எம். எல். வசந்தகுமாரி, கருநாடக இசைப்பாடகர் (பி: ஜூலை 3 1928)
2003 – செம்மாங்குடி சிறிநிவாச ஐயர், இந்திய கர்நாடக இசைப் பாடகர், (பி. 1908).
2005 – அம்ரிதா பிரீதம், பஞ்சாபி எழுத்தாளர் (பி. 1919)
2005 – பி. லீலா, பின்னணிப் பாடகி

சிறப்பு நாள்

*****

 

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...