யோகி பாபு பிறந்தநாளில் குவிந்த திரை ப்ரபலங்கள்! | தனுஜா ஜெயராமன்

 யோகி பாபு பிறந்தநாளில் குவிந்த திரை ப்ரபலங்கள்! | தனுஜா ஜெயராமன்

யோகி பாபு தன்னுடைய மகளின் முதல் பிறந்தநாளை மிக பிரமாண்டமாக கொண்டாடினார். இதில் விஜய் சேதுபதி, விஷால், உதயநிதி, ஜெயம் ரவி, விஜய் வசந்த், உள்ளிட்ட பல திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

கோலிவுட்டின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருகிறார் யோகி பாபு. சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த யோகி பாபுவுக்கு அடுத்தடுத்து மிகப் பெரிய வாய்ப்புகள் கிடைத்தன. சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய், அஜித், விஜய் சேதுபதி, சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம் ரவி என முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

முன்னணி காமெடி நடிகர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இவர், முன்னணி தமிழ் நடிகர்கள் முதல் வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் வரை அனைவருடனும் நடித்து வருகிறார்.

யோகி பாபு,  கடந்த 2020 ஆம் ஆண்டு,  பார்கவி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு, இவருக்கு விசாகன் என்கிற அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

இதை தொடர்ந்து  பார்கவிக்கு கடந்த ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்தது. யோகி பாபு தீவிர முருகர் பக்தர் என்பதால் பரணி கார்த்திகா என தன் மகளுக்கு பெயரிட்டார்.

பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வதை தவிர்க்கும், பிரபல தயாரிப்பாளரும், அரசியல் பிரபலமுமான கலாநிதி மாறனும் யோகி பாபு மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.

இவர்களை தவிர பல இயக்குனர்கள், நடிகர் நடிகைகள், தயாரிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர் இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...