அடேங்கப்பா! லியோ படத்தின் வசூல் இவ்வளவா? | தனுஜா ஜெயராமன்

 அடேங்கப்பா! லியோ படத்தின் வசூல் இவ்வளவா? | தனுஜா ஜெயராமன்

விஜய் நடித்த லியோ படம் வெளியான நாள் முதல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. லியோ படத்தின் வசூல் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி வருகிறதாம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். விஜய்யின் 67-வது படமான ‘லியோ’வை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். லியோ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், கெளதம் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சாண்டி, ‘பிக் பாஸ்’ ஜனனி ஆகியோர் நடித்துள்ளனர்.

கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லலித் குமார் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார்.

லியோ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார், பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வரிகிறார்கள் . இந்நிலையில், கடந்த 5 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.400.30 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...