புரட்டாசி ஏகாதசி அல்லது அஜா ஏகாதசி 2023 விரத மகிமை

புரட்டாசி ஏகாதசி அல்லது அஜா ஏகாதசி 2023 விரத மகிமையும், அற்புத பலன்களும் புரட்டாசி ஏகாதசி அல்லது அஜா ஏகாதசியன்று எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிறாரோ, அவர் பாவங்களின் கர்ம வினைகளிலிருந்து விடுபடுவார் என்று புராணம் கூறுகிறது.

மேலும் அஜா ஏகாதசி விரதத்தின் மகிமையை பற்றி மகாபாரதத்தில் தர்மருக்கு ஸ்ரீகிருஷ்ணர் விளக்கியுள்ளார். அஜா ஏகாதசி என்பது வருத்தத்தை நீக்கும் ஏகாதசி என்று பொருள். அஜா ஏகாதசி விரதத்தின் மகிமையை பற்றி மகாபாரதத்தில் தர்மருக்கு ஸ்ரீகிருஷ்ணர் விளக்கியுள்ளார். புரட்டாசி ஏகாதசி அன்று எவரொருவர் உபவாசம் இருந்தால் கர்ம வினைகளிலிருந்து விடுபடுவார்.

புரட்டாசி ஏகாதசி அல்லது அஜா ஏகாதசியன்று எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிறாரோ, அவர் பாவங்களின் கர்ம வினைகளிலிருந்து விடுபடுவார் என்று புராணம் கூறுகிறது. மேலும் அஜா ஏகாதசி விரதத்தின் மகிமையை பற்றி மகாபாரதத்தில் தர்மருக்கு ஸ்ரீகிருஷ்ணர் விளக்கியுள்ளார்.

அதன்படி முன்வினை பாவங்களை நீக்கும் அஜா ஏகாதசி விரதம் இன்று (10.10.2023) செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது. ஏகாதசி திதி என்பது 15 நாட்களுக்கு ஒருமுறை வரக்கூடியது. காக்கும் கடவுளான பெருமாளுக்கு உகந்த திதி என்பதால் இந்த திதியில் பெருமாளுக்கு விரதம் இருந்து, வழிபாடு செய்வதால் சகல நலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஏகாதசி விரதம் என்பது பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தது என்றும், பகவான் விஷ்ணுவின் பரிபூரண அருளை பெற்று தருவது என்றும் நாம் அறிந்ததே. ஏகாதசி விரதம் துவங்குபவர்கள் மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியன்று விரதத்தை துவங்கி, ஒவ்வொரு ஏகாதசியன்று தவறாமல் விரதம் அனுஷ்டித்து, பெருமாளை வழிபடுவார்கள். சிலர் ஒரு ஆண்டின் வைகுண்ட ஏகாதசியில் துவங்கி, அடுத்த வைகுண்ட ஏகாதசி வரை விரதத்தை தொடர்வார்கள்.

இன்னும் சிலர் வாழ்நாள் முழுவதும் விரதத்தை தொடர்வார்கள். இது அவரவர்களின் வேண்டுதல்களை பொருத்தது. ஒவ்வொரு ஏகாதசியும் தனித்துவமான பலன்களை நமக்கு அருளவல்லது. அந்த வகையில் புரட்டாசி மாதம் தேய்பிறையில் வரும் அஜா ஏகாதசி நம் தீவினைகளை நீக்கி அருளக்கூடியது.

புரட்டாசி மாதம் தேய்பிறை ஏகாதசிக்கு அஜா ஏகாதசி என்று பெயர். இதனை அன்னதா ஏகாதசி என்றும் குறிப்பிடுவர். அஜா ஏகாதசி என்பது வருத்தத்தை நீக்கும் ஏகாதசி என்று பொருள். இந்நாளில் எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிறாரோ, அவர் பாவங்களின் கர்ம வினைகளிலிருந்து விடுபடுவார் என்று புராணம் கூறுகிறது.

மேலும் அஜா ஏகாதசி விரதத்தின் மகிமையை பற்றி மகாபாரதத்தில் தர்மருக்கு ஸ்ரீகிருஷ்ணர் விளக்கியுள்ளார். அதன்படி முன்வினை பாவங்களை நீக்கும் அஜா ஏகாதசி விரதம் இன்று (10.10.2023) செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது.

அஜா ஏகாதசி விரதமுறை : ஏகாதசி திருநாளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தினந்தோறும் செய்யும் பூஜைகள் மற்றும் அனுஷ்டானங்களை நிறைவேற்றிவிட்டு, பகவான் விஷ்ணுவை மனதில் இருத்தி வழிபட வேண்டும். அன்று முழுவதும் உண்ணா நோன்பு இருப்பது நல்லது. உடல்நலம் சரியில்லாதவர்கள், சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பழங்களை மட்டும் சாப்பிடலாம்.

விரதத்தை அனுஷ்டிக்கும் போது குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை. எனவே அவ்வப்போது குளிர்ந்த நீர் குடிக்கலாம். அன்று நாள் முழுவதும் பகவான் நாமத்தை ஜெபிக்கலாம். அவரவர் இல்லங்களிலேயே பெருமாள் படத்திற்கு முன்பாக நெய் விளக்கேற்றி, துளசியை சாற்றி வழிபடலாம். விரதம் இருக்க முடியாதவர்கள் அஜா ஏகாதசி கதையையும், பலனையும் பிறருக்கு எடுத்து கூறுவதன் மூலமும், அன்று பகவான் ஸ்ரீஹரி நினைவாகவே இருப்பதன் மூலமும் ‘அஸ்வமேத யாகம்” செய்த புண்ணியம் பெறுகிறார்கள்.

அஜா ஏகாதசியின் சிறப்புகள் : பொதுவாக விரதமுறைகள், வழிபாடுகள் அனைத்தையும் கடைபிடிக்க முடியாதவர்கள் இந்த அஜா ஏகாதசி அன்று உபவாசம் இருந்தாலே முழு பலன்களையும் பெறுவார்கள். அஜா ஏகாதசியின் சிறப்புகளை மற்றவர்களுக்கு எடுத்து கூறினாலும், அதை கேட்டாலும் சகல நன்மைகள் உண்டாகும். இந்த நாளில் உண்ணா நோன்பு இருப்பவர் விஷ்ணு மற்றும் லட்சுமி தேவி ஆகிய இருவரிடம் இருந்தும் ஆசீர்வாதம் பெறுகிறார். எனவே இந்த நாளை தவறவிடாமல் பகவான் விஷ்ணுவை வழிபட்டு சகல நலன்களையும் பெறுவோமாக. ஓம் நமோ வெங்கடேஷாயா நம🙏🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!