இந்தியாவில் அதிகரிக்கும் வாகன விற்பனை! | தனுஜா ஜெயராமன்
செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் வாகன விற்பனை சுமார் 20 சதவீதமாக வளர்ச்சியைக் கண்டு இத்துறை முதலீட்டாளர்களை அசத்தியுள்ளது.
FADA அமைப்பின் தரவுகளின் படி, இரு சக்கர வாகனங்கள் 22 சதவீதமும், மூன்று சக்கர வாகனங்கள் 49 சதவீதமும், பயணிகள் வாகனங்கள் 19 சதவீதமும், வர்த்தக வாகனங்கள் 5 சதவீதமும் விற்பனையில் அதிகரித்துள்ளது.
இக்காலக்கட்டத்தில் டிராக்டர்களின் விற்பனை அளவு கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 10 சதவீத சரிவை கண்டது.
செப்டம்பர் மாதத்தில் டிராக்டர்களை தாண்டி அனைத்து வகையான வாகனங்களின் விற்பனையும் வளர்ச்சியைக் கண்டுள்ளதாக ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FADA) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மாதாந்திர விற்பனை என்று வரும்போது, இந்தியாவில் ஒட்டுமொத்த விற்பனையில் ஆட்டோமொபைல் துறை ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடுகையில் செப்டம்பர் மாதத்தில் 3.5 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. வருடாந்திர விற்பனை எண்ணிக்கை போலவே டிராக்டர் பிரிவின் விற்பனை 26 சதவீதம் சரிந்தது.
பொதுவாக ஒட்டுமொத்த ரீடைல் வாகன விற்பனை 14 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது ஆட்டோமொபைல் துறையின் நிலையான வளர்ச்சியை காட்டுகிறது,
இதேவேளையில் இந்தியாவில் விழாக்காலம் வருகையில் இது இன்னமும் முக்கிய காலக்கட்டமாக இருக்கபோகிறது.