எகனாமிக்ஸில் நோபல் பரிசு வென்ற கிளாடியா கோல்டின்! | தனுஜா ஜெயராமன்
எக்னாமிக் சையின்ஸ் பிரிவில் 2023 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை வென்றுள்ளார் கிளாடியா கோல்டின்.
பெண்களின் தொழிலாளர் சந்தை விளைவுகளைப் பற்றிய மேம்பட்ட புரிதலை தனது ஆய்வின் மூலம் உலக நாடுகளுக்கு பறைசாற்றிய கிளாடியா கோல்டினுக்கு எகனாமிக்ஸ் கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இதுவரையில் பொருளாதாரப் பிரிவுகளில் நோபல் பரிசு பெற்ற 92 பேரில் இருவர் மட்டுமே பெண்கள் என்பது குறிப்பிட தக்கது.
2023 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வெளியிடுவதில் கடைசி விருது தான் இந்த எக்னாமிக் சையின்ஸ் பிரிவு விருது. இந்த விருதைத் தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்கீட்டை ஆய்வு செய்து ஒரு பெண் பெற்றுள்ளதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்
கோல்டின் தனது ஆய்வுக்காகச் சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலான தரவுகளையும், கோப்புகளையும் சேகரித்தார். இதை அடிப்படையாக வைத்து வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு விகிதங்களில் பாலின வேறுபாடுகள் எப்படி, ஏன் மாறிவிட்டன என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை முன்வைத்தார்.
மேலும் கிளாடியா கோல்டின் ஆய்வில் 200 ஆண்டுகளில் தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்கீடு ஏறுமுகத்தில் இல்லாமல் U அமைப்பிலான வளர்ச்சிப் பாதையில் உள்ளது என்பதை நிரூபித்தார். இதேபோல் திருமணமான பெண்களின் தொழிற் சந்தையில் பங்கேற்பு 19 நூற்றாண்டின் முற்பகுதியில் விவசாயச் சமூகத்திலிருந்து தொழில்துறை சமூகமாக மாறியதும் குறைந்தது.