மேட்டூர் அணையில் நீர்வரத்து குறைவு! | தனுஜா ஜெயராமன்
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு 4 மாதத்திற்கு பிறகு இன்று காலை 6.00 மணி முதல் நிறுத்தப்பட்டது.
பாசனத்திற்காக ஜீன் 12-ம் தேதி முதல் இன்று வரை 91 டி.எம்.சி, திறக்கப்பட்டிருந்தது.
அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் மீன் வளம் மற்றும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 37 அடி அடி மட்டுமே உள்ளதால், அங்குள்ள புராதன சின்னங்கள் முழுமையாக வெளியே தெரிகிறது.
இதன்படி ஜலகண்டேஸ்வரர் ஆலய நந்தி சிலையும் கோபுரமும் வெளியே தெரிகின்றன.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை சற்று தனிந்ததன் காரணமாக அணைக்கு வரும் நீரின் வரத்து பெரிதும் சரிந்துள்ளது.
குறிப்பாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 37 அடி அடியாக குறைந்துள்ளது.
இதனால் நீரின்றி விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுவதோடு, விளைநிலங்கள் தரிசாகும் நிலைக்கு தள்ளப்படும் என டெல்டா பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.