திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானவரி துறை சோதனை நிறைவு! | தனுஜா ஜெயராமன்

 திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானவரி துறை சோதனை நிறைவு! | தனுஜா ஜெயராமன்

சட்டவிரோத பணப்பரிமாற்றம் என்ற புகாரில் ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த 5-ம் தேதி முதல் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, திருவள்ளூர், திருப்பூர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டதாகக் கூறி ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் அமலாக்கத் துறை முடக்கியது.

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரி துறை சோதனை நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் முன்னாள் மத்திய இணை அமைச்சரும், திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் தனது கல்வி நிலையங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மூலம் ஈட்டிய வருவாயை முறையாக கணக்கு காட்டாமல், வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

ஒரு சில இடங்களில் சோதனை முடிவடைந்த நிலையில், ஐந்தாவது நாளாக நேற்று பல இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தொழில்நுட்ப தடயவியல் ஆய்வை வருமானவரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

இந்நிலையில், டெல்லியில் இருந்து வருமான வரித் துறை ஆணையர் சுனில் குப்தா சென்னை வந்து சோதனையில் ஈடுபட்டுள்ளார்.

ஜெகத்ரட்சகனின் மருமகன்கள் இளமாறன் மற்றும் நாராயணசாமி ஆகியோர் வீடு மற்றும் அலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்களை கொண்டு அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அதோடு, ஜெகத்ரட்சகன் தொடர்பான இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் தற்போது, 4.5 கோடி ரூபாய் பணம் மற்றும் 2.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட ரொக்க பணம் நகைகள் முக்கிய ஆவணங்களை பெரிய பெட்டியில் வைத்து வருமானவரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்று உள்ளனர். சவிதா கல்வி குழுமங்களிலும் நடந்து வந்த வருமானவரித்துறை சோதனையும் நிறைவடைந்தது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...