பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில்,
முதல் ஆளாக அனன்யா ராவ் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.
முதல் வாரத்திலேயே பிக் பாஸ் தமிழ் 7 சீசனில் இருந்து அனன்யா ராவ் வெளியேறி இருக்கிறார். ரவீனா இவரைவிட அதிகமாக வாக்குகள் பெற்ற நிலையில் அனன்யா 9.75% வாக்கு மட்டும் பெற்று வெளியேறினார்.
கடந்த வாரம் பாவா செல்லத்துரை, ஐஷு, அனன்யா ராவ், ரவீனா தாஹா, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி மற்றும் ஜோவிகா விஜயகுமார் உள்ளிட்ட ஏழு போட்டியாளர்கள் முதல் நாமினேஷனில் நாமினேட் செய்யப்பட்டனர். இவர்களுக்கு வாக்குப்பதிவு நேற்று வரை நடைபெற்ற நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து குறைவான வாக்குகள் பெற்று முதல் நபராக அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார்.
போட்டியாளர்களும் , வெளியில் இருப்பவர்கள் பலரும் பவா செல்லதுரை அல்லது ப்ரதீப் வெளியேறுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் அனன்யா வெளியேறியது பலருக்குமே அதிர்ச்சியாக உள்ளது. அனன்யாவும் இதை சற்றுமே எதிர்பார்க்கவில்லை என அவரது முகபாவம் வெளிப்படுத்தியது.இந்த நிலையில், அவரது டாட்டூதான் இதற்கு காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அனன்யாவும் கமலிடம் அந்த டாட்டூ சந்தேகத்தை எழுப்ப , இல்லை என பலமாக மறுத்தார் கமல். அனன்யா வீட்டிலும் , மக்களையும் அதிகம் கவரவில்லை என சூசகமாக தெரிவித்தார்.
