வெளியானது லியோ ட்ரெய்லர்…

 வெளியானது லியோ ட்ரெய்லர்…

ரசிகர்களால் ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியானது. தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக திகழ்ந்துகொண்டிருக்கும் விஜய்க்கு கடைசி இரண்டு படங்கள் விமர்சன ரீதியாக சரியாக போகவில்லை. இந்த சூழலில் அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் லலித்குமார் தயாரிக்க அனிருத் இசையமைத்திருக்கிறார்.

படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. இதுவரை லோகேஷ் கனகராஜ் இயக்கிய நான்கு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருப்பதால் கண்டிப்பாக இந்தப் படமும் அந்த வரிசையில் இணையும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக படத்தின் இரண்டு சிங்கிள்களும் அட்டகாசமாக இருந்தன. அதேபோல் போஸ்டர்களுக்கும் ரசிகர்கள் பெரும் வரவேற்பை கொடுத்தனர்.

லியோ படத்தின் ஆடியோ லான்ச்சை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார்கள் ரசிகர்கள். ஆனால் சில காரணங்களால் அந்த இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. இருந்தாலும் ரசிகர்களை திருப்திப்படுத்தும்விதமாக அடுத்தடுத்து படத்திலிருந்து அப்டேட்டுகள் வெளியாகிக்கொண்டே இருந்தன. உச்சக்கட்டமாக இன்று படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட் வெளியானதிலிருந்து ரசிகர்களின் பேச்சு லியோ ட்ரெய்லர் பற்றியதாகத்தான் இருந்தது. லோகேஷ் என்னவெல்லாம் மேஜிக் செய்திருக்கிறாரோ; படம் எல்சியூவுக்குள் வருமா? படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை ட்ரெய்லர் பார்த்து ஓரளவு புரிந்துகொள்ளலாம் என ரசிகர்கள் இன்று காலையிலிருந்தே காத்திருக்க ஆரம்பித்தனர்.

லியோ ட்ரெய்லர் நேற்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி லியோ ட்ரெய்லரானது சன் டிவி யூட்யூப் சேனலில் வெளியானது. ட்ரெய்லர் ஆரம்பத்தில் விஜய் சீரியல் கில்லர் குறித்து சொல்கிறார்.

பிறகு அப்படியே ஆக்‌ஷன் காட்சிகள் விரிகின்றன. மேலும் த்ரிஷாவும் விஜய்யும் இதில் கணவன் மனைவியாக நடிக்கிறார்கள் என்பது ட்ரெய்லர் மூலம் உறுதியாகியிருக்கிறது.

குறிப்பாக பார்த்தி என்ற பெயரில் ஒரு விஜய்யையும், லியோ என்ற பெயரில் ஒரு விஜய்யையும் ட்ரெய்லரில் அறிமுகப்படுத்துகிறார்கள். எனவே இதில் விஜய் டபுள் ஆக்‌ஷனா இல்லை டபுள் கெட்டப்பா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. ஆகமொத்தம் படத்தில் பயங்கரமான ட்விஸ்ட் இருப்பது ட்ரெய்லரை பார்க்கும்போது புரிகிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...