முதன் முதல் என் தொண்டின் ஆர்வம்
மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாள்……
இந்திய தேசிய விடுதலை பெற முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவரான, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் இதே தேதியில் 1869 ல், குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தலில் பிறந்தார்.
மகாத்மா காந்தி அவர்கள், தனது வாழ்க்கை வரலாற்றினை “சத்திய சோதனை” என்னும் நூலில் எழுதியுள்ளார்.
தனது “சத்திய சோதனை” நூலில் குறிப்பிட்டள்ளதில் தொண்டில் ஆர்வம் என்னும் தலைப்பில் உள்ள அவரது கருத்தின் தமிழாக்கம்.
” என்னுடைய வக்கீல் தொழில் நன்றாகவே நடந்து வந்தது.ஆனால் அதை கொண்டு மாத்திரம் நான் திருப்தி அடைந்து விடவில்லை. மேற்கொண்டும் என்னுடைய வாழ்க்கையை எளிமையாக்கி கொள்ள வேண்டும் என்பதும், என்னுடைய சகோதர மக்களுக்கு உருப்படியான தொண்டு ஏதாவது செய்ய வேண்டும் என்றும் என் மனதில் இடையறாத ஆர்வமாக இருந்து வந்தன. அந்தச் சமயத்தில் ஒரு குஷ்டரோகி என் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.ஒரு வேலை சாப்பாட்டோடு அவரை அனுப்பி விட எனக்கு மனம் இல்லை. எனவே, என் வீட்டிலேயே அவரை இருக்கச் சொல்லி அவருடைய புண்களுக்கு கட்டுக் கட்டினேன். அவருக்கு வேண்டிய மற்ற சௌகரியங்களையும் கவனிக்க வந்தேன். ஆனால் நான் நிரந்தரமாக இப்படி செய்து கொண்டு போக முடியாது. இது என்னால் ஆகாது.எப்பொழுதுமே அவரை என்னுடன் வைத்துக் கொள்வதற்கான உறுதியும் என்னிடம் இல்லை. ஆகவே ஒப்பந்த தொழிலாளர்களுக்காக இருந்த அரசாங்க வைத்தியசாலைக்கு அவரை அனுப்பினேன்.
ஆனால் என் மனம் மாத்திரம் அமைதி இல்லாமலேயே இருந்தது. நிரந்தரமான ஜீவகாருண்ய தொண்டு செய்ய வேண்டும் என்று என் மனம் அவாவுற்றது. செயின்ட் எயிடர்களின் மிஷனுக்கு டாக்டர் பூத் தலைவராக இருந்தார். அவர் அன்பு நிறைந்த உள்ளம் படைத்தவர். தம்மிடம் வரும் நோய்களுக்கு இலவசமாக அவர் வைத்தியம் செய்து வந்தார். பார்சி ருஸ்தம்ஜியின் தர்மத்தை கொண்டு டாக்டர் பூத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒரு சிறு தர்ம வைத்திய சாலை ஆரம்பிக்க முடிந்தது.
அந்த வைத்திய சாலையில் நோயாளிகளுக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு பலமாக இருந்தது. மருந்து கலந்து கொடுக்க வேலை தினமும் இரண்டு ஒரு மணி நேரத்திற்கு இருக்கும். அந்த அளவுக்கு என் காரியாலயத்தின் வேலையை குறைத்துக் கொண்டு அங்கே கம்பவுண்டராக இருப்பது என்று தீர்மானித்தேன். என் வக்கீல் தொழில் சம்பந்தமான வேலை பெரும்பாலும் என் ஆபீசையை கவனிக்க வேண்டிய வேலை தான். சாசன பத்திரங்களை எழுதுவதிலும்,மத்தியஸ்தம் செய்வதுமே இந்த தொழில் எனக்கு முக்கியமான அலுவல். மேஜிஸ்டரேட் கோட் தொழிலில் கோர்ட்டில் எனக்கு சில வழக்குகள் இருக்கும் ஆனால் அவை பெரும்பாலும் அதே விவாதத்திற்கு இடம் இல்லாதவை களாக இருக்கும். என்னுடன் தென் ஆப்பிரிக்கா வந்து அப்போது என்னுடைய வழக்குகளை கவனித்து வந்த ஸ்ரீகான்,நான் இல்லாத சமயத்தில் என் வழக்குகளை கவனித்துக் கொள்வதாக கூறி இருந்தார்.
ஆகவே அச்சிறு வைத்தியசாலையில் எனக்கு சேவை செய்ததற்கு எனக்கு அவகாசம் இருந்தது. வைத்தியசாலைக்கு போகவும் வரவும் உள்ள நேரத்தை சேர்த்து தினம் இரண்டு மணி நேரம் இந்த ஊழியம் என் மனதிற்கு கொஞ்சம் சாட்சி அளித்தது வரும் நோயாளிகளின் நோயை குறித்து விசாரிப்பது அந்த விவரங்களை டாக்டருக்கு கூறுவது மருந்துகளை கலந்து கொடுப்பது ஆகியவையே அந்த வேலை அது துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்தியருடன் நான் நெருங்கி பழகும் படி செய்தது, இப்படித்தான் முதன் முதல் என் தொண்டின் ஆர்வம் ஆரம்பித்தது.
முருக.சண்முகம்..