தொடர்ந்து ட்ரெண்டிங்கில் ‘ஹிட்லர்’ படத்தின் பர்ஸ்ட் லுக்…

 தொடர்ந்து ட்ரெண்டிங்கில் ‘ஹிட்லர்’ படத்தின் பர்ஸ்ட் லுக்…

விஜய் ஆண்டனி தன் முந்தைய படங்களிலிருந்து விலகி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரியா சுமன் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.இயக்குநர் தனா இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ஹிட்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகியுள்ளது. விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படத்தைத் தயாரித்து வெற்றிகண்ட செந்தூர் ஃபில்ம் இண்டர்நேஷனல் நிறுவனம், தங்களது 7ஆவது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டி.டி. ராஜா, டி.ஆர். சஞ்சய் குமார் தயாரிப்பில் இயக்குநர் தனா இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பரபர த்ரில்லர் திரைப்படம் ‘ஹிட்லர்’.

ந்தப் படத்தின் முதல் பார்வையை படக்குழு மோஷன் போஸ்ட்டராக நேற்று வெளியிட்டது. முற்றிலும் மாறுபட்ட வகையில், வித்தியாசமாக அமைந்திருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் விஜய் ஆண்டனியின் தோற்றமும் இசையும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

படைவீரன், வானம் கொட்டட்டும் படங்களை இயக்கிய தனா இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி தன் முந்தைய படங்களிலிருந்து விலகி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரியா சுமன் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

ஹிட்லர் திரைப்படத்தை ஆக்‌ஷன் த்ரில்லர் வகையில் ஒரு கமர்ஷியல் திரைப்படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் தனா. பரபர திருப்பங்களுடன் பறக்கும் திரைக்கதையில், ஒரு அழகான காதலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. அனைவரும் ரசிக்கும் வண்ணம் ஒரு மாறுபட்ட அனுபவமாக இப்படம் இருக்கும்.

வரலாற்றில் சர்வாதிகாரத்தின் அடையாளமாக ஹிட்லரின் பெயர் உள்ளதால், அதன் காரணமாகவே இப்படத்திற்கு ஹிட்லர் எனப் பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் கலக்கியுள்ளார்.

மேலும் மற்றுமொரு முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் விவேக் மெர்வின் இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை கன்னடத்தின் வெற்றிப் படமான மப்டி படத்தின் ஒளிப்பதிவாளர் நவீன்குமார் செய்துள்ளார். கலை இயக்கத்தை உதயகுமார் செய்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படத்தின் டீசர், ட்ரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...