மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி அவர்கள்
5 முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார்.
பாரத ரத்னா போல் இறப்புக்குப் பின் யாருக்கும் நோபல் பரிசு வழங்கப் படுவதில்லை என்பதால் காந்திக்கு கிடைக்கவில்லை. பாரத ரத்னாவும் காந்திக்கு வழங்கப் படவில்லை.
மகாத்மா காந்தியின் இறுதி ஊர்வலத்தில் பல லட்சக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.
வரிசை நீளம் எட்டு கிலோமீட்டருக்கு மேல் தாண்டிவிட்டதாம்.
பிரிட்டனின் ஆதிக்கத்திற்கு எதிராக காந்தி போராடினார். ஆனால் அவர் இறந்து 21 ஆண்டுகளுக்குப் பின் அவரை தபால் தலை வெளியிட்டு கௌரவப் படுத்தியது இங்கிலாந்து.
காந்தி நடைப் பயணத்தின் மீது ஆர்வம் கொண்டவர்.
அவர் வாழ் நாள் முழுதும் நடந்து சென்ற தூரத்தை கணக்கிட்டால் உலகை ஒருமுறை சுற்றி வந்து விடலாம் என்கிறார்கள்.
மகாத்மா காந்தி டால்ஸ்டாய், ஐன்ஸ்டீன் போன்றவர்களோடு மட்டுமல்லாது ஹிட்லருக்கும் கடிதம் எழுதி இருக்கிறார்.
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் காந்தியின் மீது அபிமானம் கொண்டவர் . அவர் காந்தி அணிந்தது போன்ற மூக்குக் கண்ணாடியை அணிந்து பெருமிதம் கொண்டார் .
காந்தியின் ஆங்கில பேச்சு ஐரிஷ் பாணியில் இருக்கும். காரணம் அவரது ஆரம்ப கால ஆங்கில ஆசிரியர் ஒரு ஐரிஷ்காரர் .
இந்தியாவில் 53 பெரிய சாலைகளுக்கு காந்தியின் பெயர் வைக்கப் பட்டுள்ளது. காந்தி பெயர் வைக்கப் பட்டுள்ள சிறிய சாலைகள் தெருக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை.
வெளிநாடுகளிலும் 48 சாலைகள் அவர் பெயரைத் தாங்கி உள்ளன.
காந்தி புகைப்படம் எடுக்கப் படுவதை விரும்புவதில்லை எனினும் அக்காலத்தில் அதிகமாக புகைப்படம் எடுக்கப் பட்ட மனிதராகத் திகழ்ந்தார் ..
மாற்றுக் கருத்து கொண்டிருந்தபோதும் சுபாஷ் சந்திரபோஸ் தான் காந்தியை இந்தியாவின் தந்தை என்று முதலில் அழைத்தார்.
காந்தியை மகாத்மா என்று முதலில் அழைத்தவர் ரபீந்திரநாத் தாகூர்.
காந்தி 1930 இல் டைம் இதழின் TIME PERSON OF THE YEAR என்ற பட்டத்தை பெற்றார்.
இந்த பெருமையை அடைந்த ஒரே இந்தியர் காந்தி மட்டுமே.
by
Sugumar