சிறுதானியங்களால் என்ன நன்மைகள் தெரியுமா? | தனுஜா ஜெயராமன்
சிறுதானியங்களில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. எனவே சிறுதானியங்கள் செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது.
ஆதாலால் இவை மிகுந்த செரிமானத் தன்மை மற்றும் ஒவ்வாமை (Allergenic) இல்லாத தானியங்களாகக் கருதப்படுகிறது.
சிறுதானியங்களின் மலமிளக்கி பண்புகள் (Laxatives) மலச்சிக்கலுக்குச் சிறந்த தீர்வாக அமைகின்றன.
சிறுதானியங்களில் உள்ள லெசித்தின் மற்றும் மீத்தியோனின் கல்லீரலில் இருந்து உடலுக்குத் தீங்குகளை விளைவிக்கும் கொழுப்பினை வெளியேற்ற உதவுகின்றன.
நார்ச்சத்து அதிகமுள்ள உணவினை உட்கொள்ளுவதன் மூலம் பித்தப்பையில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகின்றன.
அதுவும் குறிப்பாப் பெண்கள் நார்ச்சத்து மிகுதிஆன உணவினை உட்கொண்டால் பித்தப்பையில் கற்கள் உருவாக்வதார்கு சரியான தீர்வாக அமையும்.
குடல்களில் உணவு செல்லும் காலத்தை எளிதில் கரையாத நார்ச்சத்து அதிகப்படுத்துகிறது. மேலும் பித்தப்பையில் கற்கள் உருவாகுவதற்குக் காரணமான பித்த அமிலங்களின் சுரப்பைக் குறைக்கிறது.
நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவினை உண்ணாதவர்களுடன், கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து உள்ள உணவுப் பொருட்களை உண்பவர்களுடன் ஒப்பிடும் போது, நார்ச்சத்து உண்பவர்களுக்கு 13 சதவீதம் பித்தப்பை கற்கள் உருவாவது குறைக்கப்படுகிறதாம்.
சிறுதானியங்கள் அதிகப் புரதச்சத்து மிகுந்த தானியமாகவும் மற்றும் அமினோ அமிலங்களில் ஒன்றான லைசினையும் கொண்டுள்ளது.
இவை இரண்டும் தசைகள் குறைபாட்டைக் குறைத்து வலிமையான தசைகள் உருவாகுவதற்கு உதவுகிறது.
எனவே சிறுதானியங்கள் தசைகளுக்கு மிகவும் ஏற்ற உணவாக இருக்கிறது.