ரெஷிஷனா? ஐடி துறைக்கு முக்கிய எச்சரிக்கை – நெட்ஆப் சிஇஓ ஜார்ஜ்! | தனுஜா ஜெயராமன்
டேட்டா ஸ்டோரேஜ் மற்றும் சொல்யூஷன்ஸ் பிரிவில் முன்னணி நிறுவனமாக இருக்கும் நெட்ஆப் சிஇஓ ஜார்ஜ் குரியன் முக்கியமான விஷயத்தை இந்தியாவுக்கு மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஐடி துறைக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றினை கொடுத்துள்ளார்.
ஐடி துறையில் சிறிய அளவிலான ரெசிஷன் சூழ்நிலையை எதிர்பார்ப்பதாக கூறும் ஜார்ஜ் குரியன், இந்த mild recession பிரச்சனை மோசமான நிலையை செல்வதற்குள் மீண்டு வளர்ச்சி பாதைக்கு மாறிவிடும் என ஜார்ஜ் குரியன் கூறுகிறார்.
இந்த சூழ்நிலைக்கு முக்கிய காரணம் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டு உள்ள நிலையற்ற தன்மை தான் எனவும் கூறுகிறார்.
சீனாவை அதிகளவில் நம்பியிருக்கும் நாடுகள் தான் ரெசிஷனில் தப்பிக்க வைல்டுகார்ட் ஆக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார் ஜார்ஜ்.
மேலும் அவர் கொரோனா பாதித்த 2-3 வருடத்திவ் பப்ளிக் கிளவுட் சேவைக்கு அதிகப்படியான டிமாண்ட் உருவாகி பெரிய அளவிலான வளர்ச்சியை பதிவு செய்தது.
ஆனால் கடந்த ஒரு வருடம் இத்துறையில் மந்தமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது என தெரிவித்தார். மேலும் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஜெனரேட்டிவ் AI சேவைகள் மக்கள் கைகளுக்கு வந்த பின்பு எப்போதும் இல்லாமல் kubernetes மற்றும் பிற opensource application-களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது.
இந்த மாற்றத்தை உலகில் அனைத்து நாடுகளிலும் இருப்பதாக தெரிவிக்கிறார் ஜார்ஜ் குரியன்.
இந்திய பொருளாதார வளர்ச்சியிலும், அன்னிய செலாவணியில் பெரும் பங்கீட்டை கொண்ட இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் 2023 ஆம் ஆண்டு துவங்கியது முதல் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது என்பதுமே குறிப்பிடத் தக்கது.