விப்ரோ அதிரடி சம்பள உயர்வு… ஊழியர்கள் மகிழ்ச்சி! | தனுஜா ஜெயராமன்
இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ தனது ஊழியர்களுக்கு டிசம்பர் காலாண்டில் அளிக்க உள்ள 2022-23 ஆம் நிதியாண்டுக்கான சம்பளத்தில் சராசரியாக அனைவருக்கும் 6% -8% அளவில் அளிக்க உள்ளது.
விப்ரோ கடந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டில் ஊழியர்களுக்கான சம்பள உயர்வை கொடுத்துள்ளது.
இந்த ஆண்டு அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் சம்பள உயர்வுகளை வெளியிட உள்ளதாக தெரிகிறது.
இதன் மூலம் ஒரு காலாண்டு அளவில் சம்பள உயர்வை அளிப்பதில் தாமதம் ஏற்படுத்தியுள்ளது.
விப்ரோ தனது ஊழியர்களுக்கு டிசம்பர் காலாண்டில் அளிக்க உள்ள 2022-23 ஆம் நிதியாண்டுக்கான சம்பளத்தில் சராசரியாக அனைவருக்கும் 6% -8% அளவில் அளிக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு அக்டோபர் மாதம் வர உள்ளது. அதே நேரத்தில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்திய அனைத்து ஊழியர்களுக்கும் இரட்டை இலக்கத்தில் சம்பள உயர்வு அளிக்கப்பட உள்ளது.
2024 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவில் செய்தியாளர் சந்திப்பில் விப்ரோ நிறுவனம் நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் சம்பள உயர்வு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தது. இதன் மூலம் ஊழியர்களின் எதிர்பார்ப்பு பெரிய அளவில் குறைந்தது. இதுவரை, இந்தியாவின் பெரிய ஐடி சேவை நிறுவனங்களில், டிசிஎஸ் சராசரியாக 6% முதல் 8% வரையிலான சம்பள உயர்வை கொடுத்தது. முந்தைய ஆண்டைப் போலவே, சிறந்த செயல்திறன் கொண்டவர்கள் இரட்டை இலக்க சம்பள உயர்வு பெற்றனர். இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் வழக்கமாக ஜூன்/ஜூலை மாதங்களில் சம்பள உயர்வுகளை அறிவிக்கும் வேளையில், அது ஏப்ரல் முதல் அமலுக்கு வரும். ஆனால் 2022-23 ஆம் நிதியாண்டுக்கான சம்பள உயர்வை இன்னும் அறிவிக்கவில்லை.