“ஜவான்” படத்தின் ட்ரெயிலர்! | தனுஜா ஜெயராமன்

 “ஜவான்” படத்தின் ட்ரெயிலர்! | தனுஜா ஜெயராமன்

பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜவான்’. இயக்குனர் அட்லி இயக்கியுள்ள இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 7-ம் தேதி வெளியாக உள்ளது. ஜவான் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சானியா மல்ஹோத்ரா, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை கௌரி கான் தயாரித்துள்ளார். அனிருத் இந்த படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். செப்டம்பர் 7-ந் தேதி ஜவான் படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

ஜவான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் நடிகர் ஷாருக்கான், இசையமைப்பாளர் அனிரூத், இயக்குனர் அட்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விஜய் நடிப்பில் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் அட்லி ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகிறார். ஷாருக்கான் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்ட தென்னிந்திய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த நிலையில் ஜவான் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா துபாயில் உள்ள புர்ஜ் கலிபா கட்டடத்தில் நடைபெறவுள்ளது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...