விபத்து காப்பீடு வேண்டுமா? ப்ரதம மந்திரியின் ஐன்தன் யோஜனா திட்டத்தில் சேருங்கள்…! |தனுஜா ஜெயராமன்
சமூகத்தில் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கும் குறிப்பாக நலிவடைந்த பிரிவினர் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட பிரிவினருக்கு சேமிப்பு, வைப்புத் தொகை மற்றும் காப்பீடு அளிக்கும் விதத்தில் செயல்படுத்தப்படுகிறது ஜன்தன் யோஜனா (PMJDY) திட்டம். பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா (PMJDY) அறிமுகம் செய்து ஆகஸ்ட் 28, 2023 உடன் ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்தது. பிரதமர் நரேந்திர மோடியால் 2014 இல் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் கடன், ஓய்வூதியம், வங்கி உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது தான்.
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா கணக்கு வைத்துள்ள அனைவருக்கும் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) மற்றும் பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) ஆகியவற்றின் கீழ் காப்பீட்டுத் தொகையைப் பெறலாம் என்கிறார்கள்.
PMJDY திட்டத்தின் கீழ் 50 கோடிக்கும் அதிகமான மக்கள் ஜன்தன் கணக்குகளை வைத்திருப்பதன் மூலம் முறையான வங்கி முறைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இந்தக் கணக்குகளில், சுமார் 55.5 சதவீதம் பெண்களுக்கு சொந்தமானது. 67 சதவீதம் கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் திறக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள மொத்த வைப்புத்தொகை ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது என்றார். மேலும் 34 கோடி ரூபே கார்டுகள் இந்த அக்கவுன்ட்தாரர்களுக்கு கட்டணம் எதுவுமின்றி அளிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.2 லட்சத்துக்கான விபத்து காப்பீடு பலனும் உள்ளது.