ஓணம் பண்டிகை புராண கதை
மகாவிஷ்ணுவின் வாமன அவதாரம்..
மூன்றடி நிலம் தானம் கொடுத்த மகாபலி
.. ஓணம் பண்டிகை புராண கதை மகாபலி சக்கரவர்த்தியின் தியாகத்தை போற்றும் வகையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அவர் விரும்பிக் கேட்ட வரத்தின் படி, ஓணத்திருநாள் அன்று மட்டுமே அவர் பூமிக்கு வந்து மக்களை சந்திக்கிறார். தேவர்களை காக்க குறுமுனியாக அவதரித்த வாமன மூர்த்தி திருஅவதார நாள்தான் திருவோணத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
மகாபலி சக்கரவர்த்தி: ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரம்தான் கேரள மக்களால் ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இன்றைக்கும் தமிழ்நாட்டில் மலையாள மொழி பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. உயிரை விட கொடுத்த வாக்கே முக்கியம் என்று மூன்று அடி தானம் கொடுக்க துணிந்தார் மகாபலி. சிறிய உருவம்தான் என்றாலும் மண்ணுலகத்தை ஓரடியிலும் விண்ணுலகத்தை இரண்டாவது அடியாகவும் அளந்து விட்டு இன்னொரு அடி எங்கே என்று கேட்டார் வாமனர். தனது தலையைக் காண்பித்து இன்னொரு அடி இதோ என்று தலையை நீட்டிய மகாபலியை வாழ்த்தி பாதாளம் நோக்கி அழுத்தினார்.
அன்று முதல் பாதாள உலகத்தின் சக்கரவர்த்தியானார் மகாபலி மன்னர். மகாபலியின் தியாகத்தை எல்லோரும் கொண்டாடினார்கள். ஓணம் பண்டிகை: கானம் விற்றாவது, ஓணம் கொண்டாடு’ என்பது பழமொழி. மலையாள மொழி பேசும் மக்கள் கொண்டாடும் திருவோணத்திருவிழா முன்பு தமிழர்களின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றாகவே இருந்திருக்கிறது என்பதை சங்க இலக்கியங்கள் மற்றும் பக்தி இலக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
திருவோண நட்சத்திரம் திருமாலுக்கு உரியது. சங்க கால இலக்கியங்களில் திருமாலின் பிறந்த நாளென்றும் வாமன மூர்த்தி அவதரித்த நட்சத்திரமும் திருவோணம்தான் எனவும் குறிப்புகள் உள்ளன. சங்க கால இலக்கியமான ‘மதுரைக் காஞ்சி’ நூல். மாயோன் மேய ஓண நன்னாள்’ என்று குறிப்பிட்டுப் பாடுகிறது. ஓணம் கொண்டாட்டம்: ஆவணி மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கியுள்ள இந்த விழா, சித்திரை, சுவாதி, விசாகம், அனுசம், கேட்டை, மூலம், பூராடம், உத்ராடம், திருவோணம் என பத்து நட்சத்திர நாளிலும் கேரளாவில் கொண்டாடப்படுகிறது. கடைசி நாளான திருவோணத்தன்று தன் மக்களைத் தேடி வரும் மகாபலி மன்னனை வரவேற்க கேரள மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் “அத்தப் பூக்கோலம்’ போட்டு, புத்தாடைகள் அணிந்து தீபாவளி போன்றே பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுகின்றன
ர். பாண்டிய நாட்டின் புகழ்பெற்ற மன்னன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனின் ஆட்சி காலத்தில் பத்து நாள் விழாவாக ‘ஓணம் திருநாள்’ இருந்தது என மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனார் குறிப்பிடுகிறார். சிறப்பான விருந்துகளும், ‘சேரிப்போர்’ என்னும் வீர விளையாட்டும் நடைபெற்றதாகவும் குறிப்புகள் உள்ளன. வாமனர் கோயில் என்று சொல்லப்படும் திருக்காட்கரை தலத்து காட்கரையப்பன் கோயிலில் நம்மாழ்வார் பதினோரு பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்துள்ளார்.
மகாபலி சக்கரவர்த்தி:
புராண காலத்தில் மகாபலி என்னும் மன்னர் தென்னிந்தியாவைச் சிறப்பாக ஆட்சி செய்து வந்தார். அவரது சிவ வழிபாட்டினாலும் பல்வேறு பூஜைகளாலும் சிவபெருமான் மனம் குளிர்ந்து பல வரங்களையும் வழங்கிட, மூவுலகையும் ஆளும் சக்கரவர்த்தியானார். இதனால், தங்களுக்கு ஆபத்து வந்து விடும் என்று அஞ்சிய தேவர்கள் திருமாலின் உதவியை நாடினர். திருமாலும் ‘வாமன வடிவம்’ என்னும் அந்தணராக வேடம் கொண்டு மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்று அடி மண்ணைத் தானமாகக் கேட்டார். ‘கேட்பவர்களுக்கு இல்லை’ என்று சொல்லாமல் தானம் வழங்கும் மகாபலி அவர் கேட்டதைக் கொடுக்க முடிவு செய்தார்
. தானம் கேட்டு வந்திருப்பவர் திருமால் என்று அறிந்த அசுர குருவான சுக்கிராச்சாரியார், மகாபலி சக்கரவர்த்தியைத் தடுத்தார். வாக்கை காப்பாற்றிய மகாபலி: குருவின் அறிவுரையை மீறி, மகாபலி சக்கரவர்த்தி மூன்று அடி மண் தானம் கொடுக்க சம்மதித்தார். கேட்பவர் திருமால் என்றும் கேட்டதைக் கொடுத்தால் தன் உயிரே போகும் என்று அறிந்தும் கேட்ட வரத்தை அளித்து உயிர்த்தியாகம் செய்தார் மகாபலி சக்கரவர்த்தி
. மகாபலி மன்னரின் விருப்பத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் ஓணத் திருநாளன்று அவர் இந்த பூமிக்கு வருகை புரிகிறார். அவரை வரவேற்கும் பொருட்டே இந்தத் திருநாள் கொண்டாடப்படுகிறது. ஓணம் சத்யா: கேரளா மட்டுமல்லாது உலகம் முழுவதும் மலையாள மொழி பேசும் மக்களால் கொண்டாடப்படும் இந்த விழா அவர்களின் ‘அறுவடைத் திருநாள்’ என்றும் போற்றப்படுகிறது. சிங்கம் மாதத்தில் ஒரு கொண்டாட்டமான திருவிழாவாக இது நடைபெறுகிறது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ‘ஓண சத்யா’ என்ற நிகழ்ச்சியின் சிறப்பை உணர்த்துவதாகும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகை உணவு தயாரிக்கப்படும். புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், பால் பாயசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரைப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு, பப்படம், சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு
கடவுளுக்கு படைக்கப்படும். தேங்காயும் தயிரும் அதிகம் சேர்க்கப்படும் இந்த உணவு செரிமானம் ஆவதற்காகத்தான் உணவில் இஞ்சிக்கறி, இஞ்சிப்புளி கடைசியில் சேர்க்கின்றனர். விருந்துண்ட களைப்பு தீர நடனமாடியும், ஊஞ்சலாடியும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
Manjula
Enter