தமிழகத்தில் 465ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை!
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லாமல் அதே விலையிலேயே தொடர்கிறது. தொடர்ந்து விலை மாற்றம் இல்லாமல் அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது
தமிழ்நாட்டில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்று வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 465ஆவது நாளாக அதே விலையிலேயே விற்கப்படுகிறது.
முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி இருந்து வருவதால் மேற்கூறிய பொருள்களிலும் பெரிய அளவில் மாற்றம் இல்லை.
பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை பொருத்தவரை மாநிலங்களுக்கு மாநிலங்கள், மாவட்டங்களுக்கு மாவட்டங்கள் சிறிய அளவிலான மாற்றம் ஏற்படும்.
பெட்ரோல் இறக்குமதியை சார்ந்து தான் இந்தியா உள்ளது. இந்தியா, தன்னுடைய கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதியை தான் உள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா போருக்கு முன்னால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலைக்கும் தற்போதைய விலைக்கு இடையே மாறுபாடு உள்ளது.
இந்தியா கச்சா எண்ணெய் தேவையை OPEC (organisation of petroleum exporting countries) என்னும் அமெரிக்க ஆதரவு பெற்ற அரேபிய கூட்டமைப்பு மூலமும், ரஷ்யாவிலிருந்து பெரும்பாலும் நிறைவு செய்து கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.