சந்தானத்தின் “கிக் “ படத்தின் லிரிக் வீடியோ வெளியீடு!

சந்தானம் நடிக்கும் கிக் படத்தின் கலக்கலான கலர்புல் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.

ஃபார்ச்சூன் தயாரிப்பில் சந்தானம் நாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘கிக்’. கன்னடத்தில் வெளியான ‘லவ்குரு’, ‘கானா பஜானா’ , ‘விசில்’, ‘ஆரஞ்ச்’ போன்ற படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

முன்னதாக, சந்தானம் நடிப்பில் வெளியான ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கிக் திரைப்படத்தின் கலகலப்பான புதிய ரிலீஸ் ட்ரெய்லரை பட குழுவினர் வெளியிட்டிருந்த நிலையில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.

சந்தானத்தின் ஜோடியாக, ‘தாராள பிரபு’ படத்தில் நடித்த தான்யா ஹோப் நடிக்கிறார். தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், மன்சூர் அலிகான், மனோபாலா, Y.G.மகேந்திரன், ஷகிலா, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.

சந்தானத்தின் பக்கா காமெடி என்டர்டெய்னராக கிக் திரைப்படம் வருகிற செப்டம்பர் 1ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் கலக்கலான கலர்புல் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!