பேசும் புத்தகங்கள்/கானகன்

 பேசும் புத்தகங்கள்/கானகன்

பேசும் புத்தகங்கள்
கானகன்

இன்று
சமீபத்தில் நான் படித்த கானகன் புத்தகத்தைப்பற்றி என்னோட கண்ணோட்டம்.
ஆசிரியர் : லட்சுமி சரவணகுமார்
வெளீயிடு :
ஜீரோ டிகிரி பப்ளிஷிங் ,எண் 55.(7) R பிளாக்,
6வது அவின்யூ ,அண்ணாநகர் , சென்னை – 600 040.
விலை ரூ. 300/-, பக்கம் :258.

இந்த நுல் 2016ம் ஆண்டின் யுவ புரஸ்கார் விருது பெற்றுள்ளது.
நான் ஒரு நாவலை படிக்கும் முன் முன்னுரைகளை படிப்பதில்லை.
காரணம் ,அவை என்னை பாதித்து விடும் என்பதால் நாவலின் ரசனை போய்விடும் என்பதால்.
நாவலை முழுவதுமாக படித்த பின்பே ஆசிரியிரின் உரையை படிப்பது வழக்கம்.
நான் படித்து முடித்தபின் எனக்கும் ஆசிரியருக்கும் ஒரு பந்தமே ஏற்படும் போல உணர்ந்தேன்.,
இந்தக்காட்டின் ஒவ்வொரு எச்சமும் ஒரு பிரபஞ்சத்தின் துவக்கம் தான் நாவலில் ஒரு வரி இது.

நான் இந்த நாவலை படிச்சிட்டு இன்னும் அந்த நாவலின் பாதிப்பிலிருந்து வெளியே வரவில்லை.
இன்னும் நான் அந்த பளியக்குடி காட்டுல தான் இருக்கேன். .சந்தர்ப்பம் கிடைத்தால் அந்த காட்டிற்கு செல்லவும் தயாராக இருக்கிறேன் .
கானகன் உண்மையில் யார். அவர் எனக்கு ஆசிரியர் லட்சுமி சரவணகுமார் தான் என தோன்றுகிறது.
அவரின் எழுத்து நாமே அந்த கானகத்தில் வசிப்பது போலவே உணர்வோம்.
இந்த நாவலை நான்கு பகுதிகளாக கொடுத்து அந்த காலங்களின் தன்மைக்கேற்ப சம்பவங்கள்,

 1. பெருங்காலம் இது பனிக்காலப்பொழுதுகள்
 2. பெருங்காலத்தில் ,,இளவேனிற்கால நாட்கள்
  3 வது பெருங்காலத்தில் கோடைகாலமும் 4வதில் பெருமழைக்காலம் பற்றியும்
  நாவலின் கதா பாத்திரங்கள் நம்மை ஊடுருவுகின்றன.
  இந்த நாவலின் அனைத்து கதாபாத்திரங்களை அவர்களின் குணநலன்களுடன் நம்மை கட்டி போட்டு அவர்களுடன் நம்மை அந்த கானகத்தில் உலவ வைக்கிறார் ஆசிரியர்.
  தங்கப்பன், வாசி , சடையன் , அன்சாரி ,, பூசணி, சேட்டன்
  இவர்களுடன் செல்லாயி , மாரி. சகாயராணி ,குயிலம்மாள்
  அந்த ஜமின்தார் செனை மானை சுட்டுவிட்டு பின் கதறுகிறார் , தன் தவறை உணர்ந்து அந்த காட்டிலேயே மாயமாகிறார்.நமக்கே அழுகை வருகிறது.
  இப்படி அனைத்து கதா பாத்திரங்களும் நாம் இந்த காட்டில் இல்லை இப்பக்கூட நகரத்தில பார்க்கலாம்.
  காட்டுக்குள்ளே திருடித்தின்று பழக்கப்பட்டுட்டா மனுஷன் மிருகமாயிடுவான்.அவனத்திருத்த முடியாது, இந்தக்காடு இருந்தவரைக்கும் இனி இவனுக இருப்பானுங்க
  நாவலில் ஆசிரியர் சொல்கிறார்.
  ஆசிரியரின் ஒவ்வோரு எழுத்தும் மனசுல பதிஞ்சு போகுது
  அந்த எழுத்தின் வலிமையில் நாம அந்த காட்டு மனிதர்களுக்காக சிரிக்கிறோம் ,அழுகிறோம்.
  அந்த காடுகள் அழியக்கூடாத என்பதில் நாம் தீர்மானமாக நிற்கிறோம்.
  அந்த காட்டு விலங்குகளை காப்பாற்ற நினைக்கிறோம்.
  .
  காட்டு மக்களுடைய ஆசாபாசங்கள்,விலங்குகளின் சுபாவங்கள்,
  இவை நம்மை அந்த இயற்கைக்கு கட்டுப்பட வைக்கிறது.
  நான் இயற்கை விரும்பி விலங்குகளை நேசிப்பவன்.
  அதனாலோ இந்த நாவலை விட்டு என்னால் வெளியே வர முடியல.
  தங்கப்பன் போன்றோர் கொடுமைக்கார்கள் அல்ல.
  அந்த வேட்டைக்காரனோட குணாதிசயம்.
  வாசி வேட்டைக்காரன் தான் அதையும் மீறி அவன் ஒரு மாமனிதன் என சொல்ல்ம்.
  உன்னிப்பாக கவனித்தால் அந்தக்காடு தான் நம்மோட உடல்.
  அந்த அசுர .தேவ குணங்கள் நம்மோட மனசாட்சி.
  நம் உடலுறுப்புகள் தான் அந்த விலங்குகளும் மனிதர்களும்.

நாம் விலங்குகளை அழிக்க நினைத்தால் அவை அழியப்போவதில்லை.
அவைகளின் சீற்றம் மனிதர்களின் சீற்றத்தைவிட கோரமானதே.
அந்தக்குட்டிப்புலி தனது தாயைக் கொன்றவனை ,,,
எப்படி காத்திருந்து பழி வாங்குது
சிலிர்க்கிறது .
அந்த யானையும் நன்றி மறவாமல் வாசியை காப்பாற்ற …
விலங்குகளுக்கும் மனசு இருக்கு, அதுகளும் சிந்திக்கும் .அவைகளின் கோபம் மனிதர்களை என்ன வேண்டுமானலும் செய்யலாம் என்பதை இந்த நாவலில் நாம் பார்க்கிறோம்.

தங்கப்பன் சேட்டன் கிட்ட சொல்வான்
.’என்னவோ சேட்டா … காட்ட விட்டு இறங்கி வந்தா மனுசன் செய்யற எதுவும் புரிய மாட்டேங்குது .மிருகங்க பரவா இல்ல. போல எனக்கு அதுக எல்லாமே என்ன செய்ய்து ,எதுக்காக செய்யிதுனு புரிங்ங்ஞ்சுக்க முடியுது மனுஷன்களைத்தான் புரிடங்ஞ்சுக்க முடியல’ என்பான்
அது உண்மைதானே.
சிவன் இல்லான சக்தி இல்லை.
சக்தி இல்லைனா சிவன் இல்லை.
ஒரு மனிதனின் அனைத்து சீற்றங்களை தணித்து அவனை ஆட்படுத்தி அவனை அமைதிப்படுத்த தன்னை கொடுப்பதே ஒரு பெண்தான்.
அவர்களும் போற்றப்படுபவர்களே, வெறும் காம சுகத்திற்காக அல்ல அவர்கள் என்பதை இந்த புளியங்குடி பெண்களே உதாரணம்.
செல்லாயி,மாரி, சகாயராணி ,குயிலம்மாக்கள் போன்றவர்கள்.
சடையன் போன்றோர் தலைமையேற்று நடத்துபவர்கள்.
இந்த நாவலின் பின் அட்டையை முதலில் படிக்க நேர்ந்துவிட்டது.
அது ஒரு தவறாக அமைந்துவிட்டது.
நாவலின் இதான் முடிவு வென திரு ராஜதுரை சொல்லியதால்,
இந்த நாவலை முழுவதுமாக என்னால் ஊன்ற முடியாமல் போய்விட்டதே.
உமாகாந்தன்

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...