சூப்பர் ஸ்டார் ரீல் மகன் வசந்த் ரவி…யார் இந்த வசந்த் ரவி தெரியுமா?

 சூப்பர் ஸ்டார் ரீல் மகன் வசந்த் ரவி…யார் இந்த வசந்த் ரவி தெரியுமா?

தரமணி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகர் வசந்த் ரவி. சமீபத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நமது சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தின்  ரீல் மகன்.இவர் யாருடைய ரியல் மகன் என்பது தெரியுமா? வசந்த் ரவி இங்கிலாந்தில் Health Care Management படிப்பை முடித்துவிட்டு அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி இருக்கிறார். பின் சினிமாவில் உள்ள ஆர்வத்தால் நடிக்க வந்து தரமான படங்களாக நடித்து வருகிறார். அதன்பின் ராக்கி என்ற படத்தில் நடித்தார், படம் நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.சமீபத்தில் அஸ்வின்ஸ் என்ற படத்தில் நடித்த இவருக்கு ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க சூப்பராக நடித்து இப்போது மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

இந்த படத்தில் ரஜினியின் மகனாக போலீஸ் அதிகாரியாக வசந்த் ரவி நடித்திருக்கிறார். இந்த படம் வசந்த ரவியின் திரைவாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வசந்த் ரவி வேறுயாரும் இல்லை தமிழகத்தில் பல்வேறு கிளைகள் கொண்ட பாரம்பரிய மிக்க ஹோட்டல் குழுமமான வசந்த பவன் நிறுவனர் ரவி முத்துகிருஷ்ணனின் மகன் தானாம்.

ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிக்கும் வசந்த் ரவி இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினியின் மகனாக நடித்து அனைவரின் கவனத்தையும் தன் மீது திருப்பியுள்ளார். படத்தில் இவரது  காரெக்டருக்கான டிவிஸ்ட் மிகப்பெரிய திருப்பு முனையை படத்தில் ஏற்படுத்தியிள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில் இவருக்கு ஜெயிலர் படம் இவரது திரை வாழ்க்கையில் மிகப்பெரிய மைல்கல்லாக அமையும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...