நீங்கள் சீனியர் சிட்டிசனா? அப்ப இதை தவறாமல் படிங்க…!!!
கொரானா காலத்திற்கு முன்பு இருந்த சில சலுகைகளில் பல இடையில் காணாமல் போயிருந்தது. தற்போது மீண்டும் அவை புத்துயிர் பெற்றுள்ளது என்கிறார்கள் இரயில்வே துறையினர்.
இனி மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட் புக் செய்யும் போது 50 % தள்ளுபடி பெற்றிடுங்கள் என்கிறார்கள்.
பயணிகளுக்கு சீரிய பயணத்தை வழங்கும் பொருட்டு இந்திய ரயில்வே, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) உடன் இணைந்து ரயில் டிக்கெட் புக்கிங், விமான டிக்கெட்டுகள், ஹோட்டல், ஹாலிடே பேக்கேஜ்கள் புக்கிங், ஆன்லைனில் உணவு ஆர்டர் என பல சேவைகளுக்கு வழி வகுக்கிறது. IRCTCயில் ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும் போது பல்வேறு சலுகைகளையும் நீங்கள் சீனியர் சிட்டிசன் எனில் அதற்கான சலுகைகளை பெறலாம்.
உங்கள் வீட்டு பெற்றோர்கள், தாத்தா, பாட்டிக்கு டிக்கெட் புக் செய்யும் பொது மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை பெறலாம். 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் 40 மற்றும் 50 சதவீதம் தள்ளுபடியில் ரயில்களில் சலுகை முறையில் டிக்கெட் புக் செய்து கொள்ளலாம் என்கிறார்கள்.