லால் சலாம் சூட்டிங் ஒவர்…!!!! மொய்தீன் பாய் ரஜினி கேக் கட்டிங்…!!! – தனுஜா ஜெயராமன்.

 லால் சலாம் சூட்டிங் ஒவர்…!!!! மொய்தீன் பாய் ரஜினி கேக் கட்டிங்…!!! – தனுஜா ஜெயராமன்.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி உள்ள லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

லால் சலாம் படத்தின் முதல்கட்ட படிப்பிடிப்பு ஏற்கனவே மும்பை, திருவண்ணாமலையில் நடந்து முடிந்தநிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் சில தினங்கள் நடைபெற்றது.

திருவண்ணாமலையில் சில மாதங்களுக்கு முன்பு தான் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தொடங்கி இருந்தார். அதற்குள் விறுவிறுப்பாக படத்தின் வேலைகளை முடித்து விட்டு ஜூலை மாதமே ஷூட்டிங்கையும் முடித்துள்ளார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

லால் சலாம் படத்தில் ஹீரோக்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

லால் சலாம் படத்தில் மும்பையை சேர்ந்த டானாக ரஜினி வருகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், மொய்தீன் பாயை அறிமுகப்படுத்தி இருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
இந்நிலையில், தலையில் குல்லா எல்லாம் போட்டுக் கொண்டு மொய்தீன் பாய் லுக்கில் நடிகர் ரஜினிகாந்த் படத்தின் நிறைவு நாளிலும் கலந்து கொண்டு கேக் கட்டிங் செய்த போட்டோ தற்போது வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...