பிரபல பாப் பாடகி மடோனா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி….

 பிரபல பாப் பாடகி மடோனா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி….

ஏழு முறை கிராமி விருது வென்ற, பிரபல பாப் பாடகி மடோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர பாக்டீரியா தொற்று காரணமாக ICU-வில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

பிரபல அமெரிக்க பாப் பாடகி மடோனா வயது 64 தீவிர பாக்டீரியா தொற்று காரணமாக icu தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செரிஷ் என்ற படத்தில் நடித்தபோது மடோனாவுக்கு தீவிர பாக்டீரியா தொற்று ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவரது மேலாளர் கை ஓசிரி கூறியதாவது

“கடந்த 25ஆம் தேதி மடோனாவுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது. இது அவரை தீவிர சிகிச்சை பிரிவில் பல நாட்கள் தங்க வழிவகுத்துள்ளது. தற்போது மடோனாவின் உடல் நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது. கனடா வான்கோவரில் (Vancouver) ஜூலை 15 ஆம் தேதி தொடங்க இருந்த அவரின் சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்படுகிறது. சுற்றுப்பயணம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டில், “மேடம் எக்ஸ்” சுற்றுப்பயணத்தின் போது மடோனாவுக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

மடோனா 1958ஆம் பிறந்தவர். கையில் 35 டாலர்கள் மட்டுமே வைத்துகொண்டு 1977 இல் நியூயார்க் சென்றார். நிர்வாண மாடலிங் முதல் டோனட்ஸ் விற்பது வரை பல நிலைகளை கடந்தவர் மடோனா. 1982 ஆம் ஆணடு அவரது முதல் தனிப்பாடல் (Everybody) வெளியானது.

அதனைத்தொடர்ந்து லக்கி ஸ்டார்”, “பார்டர்லைன்” “ஹாலிடே” உள்ளிட்ட பல வெற்றிப் பாடல்களை தந்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். 1984 ஆம் ஆண்டு வெளியான “லைக் எ விர்ஜின்” மடோனாவை சர்வதேச அரங்கில் புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...