ஜூன் 26ம் நாள் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்

 ஜூன் 26ம் நாள் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்

ஜூன் 26ம் நாள் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாக உலகம் முழுதும் கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 20 கோடி பேர் போதை பொருள்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள்.

போதை என்றால் மது மற்றும் புகையிலைத் தொடர்பானவை என பலரும் நினைக்கின்றனர். ஆனால் உலகம் முழுவதும் இளம் தலைமுறையினரை சீரழிக்கும் சக்திவாய்ந்த போதை பொருட்களான கஞ்சா, அபின், கோகைன், பிரவுன் சுகர் மற்றும் பிராந்தி, விஸ்கி, ஒயிட்னர், சில பெயின்ட் வகைகள் என பலவகை பொருட்கள் போதையூட்ட பயன்படுத்தப்படுகின்றன.

இவை மனிதரின் உடல், மனம் இரண்டையும் சிதைத்து சமூகத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. போதைப்பொருள் கடத்தல், விற்பனை செய்தல் போன்றவற்றை ஒழிக்க சட்டங்கள் மூலம் உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. ஆனால் போதை பயன்பாடு அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை.

போதைக்கு அடிமையானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு போதை பழக்கத்தின் தீமைய உணர்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மையங்களுக்கு அழைத்து சென்று சிசிச்சை அளித்து அவர்களின் மறுவாழ்வுக்கு உதவ வேண்டும்.

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...