நீதிமன்றத்தில் தனது வெற்றியை மீண்டும் நிரூபித்த நடிகர் விஷால்…!

 நீதிமன்றத்தில் தனது வெற்றியை மீண்டும் நிரூபித்த நடிகர் விஷால்…!

நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சக்ரா’. இப்படத்தை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மூலம் நடிகர் விஷாலே தயாரித்தித்திருந்தார். இப்படம் வெளியாக இருந்த சமயத்தில் நடிகர் விஷால் நடிப்பில் அதற்கு முன் 2019ம் ஆண்டு வெளியான ‘ஆக்ஷன்’ திரைப்படத்தில் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறி சில தவறான தகவல்களுடன் தயாரிப்பாளர் ரவீந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்,

இவ்வழக்கால் சக்ரா திரைப்படம் வெளியாவதில் மிகுந்த சிக்கல் எழுந்த நிலையில் உயர்நிதிமன்றம் கூறிய அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி வழக்கை ஜனநாயக முறையில் பின்பற்றி வந்த நடிகர் விஷால் அவர்களுக்கு நீதிமன்றம் ரவீந்திரன் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்து நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது.

வழக்கின் தீர்ப்பை எண்ணி மகிழ்ந்த நடிகர் விஷால் மாண்புமிகு நீதிமன்றத்திற்கும், மாண்புமிகு நீதிபதி அவர்களுக்கும், எப்போதும் துணை நிற்கும் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பகர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...