லியோ அப்டேட்ஸ்… ஆயுத பூஜை விடுமுறைக்காக காத்திருக்கும் தளபதி ரசிகர்கள்…!!!

 லியோ அப்டேட்ஸ்… ஆயுத பூஜை விடுமுறைக்காக காத்திருக்கும் தளபதி ரசிகர்கள்…!!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துக் கொண்டிருக்கும் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்பதற்காகவே ஆயிரத்திற்கு மேற்பட்ட படக்குழுவினர்கள் துரிதமாக பணியாற்றி வந்தனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் மெகா திரைப்படம் லியோ. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அறிவிப்பு வரும் முன்பே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள், பரபரப்புகள் அதை வார்த்தைகளில் எல்லாம் அடக்கிவிட இயலாது.

நடிகர் விஜய்யுடன் திரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் மற்றும் பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் கொண்ட இப்படக்குழு இப்பட வியாபாரத்தில் 1000 கோடியை எட்டும் என எதிர்பார்ப்புடன் உள்ளது.

இப்பட நிறுவனம் ஏற்கனவே அக்டோபர் 19ஆம் தேதி, ஆயுத பூஜை. தொடர் விடுமுறையை லியோ படத்திற்காக புக் செய்துவிட்டது. தொடர்ந்த விடுமுறை நாட்கள் என்பதால் நல்ல லாபத்தை விரைவில் ஈட்டிவிடலாம் என்பது படக்குழிவின் திட்டமாக இருக்கலாம் எனவே விரைந்து பணிபுரிந்து வருகின்றனர்.

ஜூன் மாத கடைசியில் லியோ படத்தின் ஷூட்டிங் முடிவு வர உள்ளது. அடுத்த வரும் நாட்களில் தளபதி விஜய்யின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ஒரு மெகா அப்டேட் இருக்க வாய்ப்புள்ளது. அதன் பின்னர் 2 மாதங்கள் எடிட்டிங், டப்பிங் என போஸ்ட் புரொடக்ஷன் தீவிரமாக இருக்கும். கடைசி 2 மாதங்களில் எப்போதும் இல்லாத அளவிலான புரொமோஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் pan india படம் என்பதால் விக்ரம் படத்திற்கு கிடைத்த விளம்பரம் போலவே இப்படத்திற்கும் கிடைத்ததால் 1000 கோடி நிச்சயம்.

இந்தத் திரைப்படம் தமிழ்,தெலுங்கு, மலையாளம்,கன்னடம் ,ஹிந்தி போன்ற ஐந்து மொழிகளில் வெளியிடப்படுவதால் கே ஜி எஃப் பாகுபலி போன்று ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் பெரும் . இந்த படம் ஒரு ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எந்த மாதிரியான கதைக்களமாக இருந்தாலும் அதை கொண்டாட தளபதி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிட தக்கது

மேலும் இந்த திரைப்படத்திற்கு இசை அமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைப்பதால் இந்த திரைப்படத்தின் பாடல்களின் நிச்சயம் வெற்றி அடையும்.  இதற்கு முன்பு பீஸ்ட் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு அனிருத்  அமைத்த அரபிக் குத்து என்ற பாடல் இன்று வரையும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த திரைப்படத்திலும் பாடல்கள் வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...