“என் சொந்த நலனுக்காகக் கட்சி மாறியவன் இல்லை” மனம் திறந்தார் தமிழருவி மணியன்

 “என் சொந்த நலனுக்காகக் கட்சி மாறியவன் இல்லை”  மனம் திறந்தார் தமிழருவி மணியன்

காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் தன்னிலை விளக்கமாக “நான் என் சொந்த நலனுக்காகக் கட்சி மாறியவன் இல்லை.” என்று மனம் திறந்த அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு அளித்திருக்கிறார். அந்த அறிக்கை இங்கே…

கதையல்ல, வரலாறைக் கண்டவர்களுக்கு, தமிழருவி மணியன் பல கட்சிகளுக் குத் தாவியவர் என்பது போன்ற தோற்றம் எழும். நான் என் சொந்த நலனுக்காகக் கட்சி மாறியவன் இல்லை. நான் இருந்த காமராஜரின் காங்கிரஸ் இயக்கம்தான் ஸ்தாபன காங்கிரஸ், ஜனதா, ஜனதா தளம் என்று பெயர் மாற்றம் பெற்றது. அதன் ஒரு பிரிவே லோக் சக்தியானது. 

நான் தொடங்கியது காந்திய மக்கள் இயக்கம் ஒன்றுதான். அதுதான் இன்று காம ராஜர் மக்கள் கட்சியாகப் பெயர் மாற்றம் பெற்றது.

தொடக்கம் தொட்டு இன்றுவரை தமிழகத்தின் அரசியல் ஆரோக்கியத்தை அழித் தொழித்த இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு எதிரான என் இலட்சியப் போராட்டம் சற்றும் நிறம் மாறாமல் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. பிழைப்பதற்காக நான் அரசியலைத் தேர்ந்தெடுக்கவில்லை. ஏழையும் பாழையும் வளம் பெறுவ தற்கு உழைப்பதற்காகவே நான் அரசியலில் இயங்குகிறேன். 

என் இலட்சியத்தில் நான் தோற்றுப் போகலாம். If there is no response for my call, i will walk alone என்ற தாகூரின் கீதமே என் வேதம்.

அற்புதமான சிலை வடிப்பதில் ஈடுபட்டவன் கையில் உள்ள உளி கூர் மழுங்கிப் போனால் அதை வீசி எறிந்துவிட்டு வேறு உளியைத்தான் பயன்படுத்தப் பார்ப் பான். கூர் மழுங்கிய உளியைத் தொடர்ந்து பயன்படுத்தினால் சிற்பம் சிதைந்து விடும்.

சிற்பிக்கு முக்கியம் உளியல்ல; அவன் கற்பனையில் கண்ட சிலை. நானும் அரசியல் வாழ்வில் ஒரு சிற்பிதான்.

அன்புடன்

தமிழருவி மணியன்

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...