மூளைச்சாவடைந்த வேலூர் பெண் 6 உறுப்புகள் தானம் பெறப்பட்டது.

 மூளைச்சாவடைந்த வேலூர் பெண் 6 உறுப்புகள் தானம் பெறப்பட்டது.

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மூளைச்சாவு அடைந்த வரின் உடல் உறுப்புகள் முதன்முறையாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றப் பட்டு மற்ற மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நவீன அறிவியல் துறையின் வளர்ச்சியால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை யில் பெரும் பயன் விளைந்துவருகிறது. அதன் காரணமாக மக்கள் மத்தியில் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவது நல்ல அறிகுறி.  உடல் உறுப்பு தானம் செய்வதில் இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாகத் தமிழகம் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த ஆகாரம் கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்வி சாலை விபத்தில் படுகாயம் அடைந்து மூளைச்சாவு அடைந்தார். அதன் காரணமாக உறவினர்கள் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க உறவினர்கள் ஒப்புக்கொண்டனர். இதயம், இரண்டு சிறுநீரகம், கல்லீரல், இரண்டு கண்கள் தானமாக வழங்கப்பட்டது பலரை அதிசயமாகப் பார்க்கப் பட்டது.

மரணத் தருவாயில் இருக்கும் ஒருவருக்கு முகமறியா  ஒருவர் தன் உறுப்பு களை  தானமாகத் தந்து காப்பாற்ற முன்வருவதற்கு மிகப் பெரிய கருணை வேண்டும். மண்ணுக்குள் புதைந்து அழிந்து போகும் விலைமதிப்பற்ற உடல் உறுப்புகளை மற்றவர் வாழ தானம் செய்ய முன் வர வேண்டும். 

ஒருவர் உடல்  உறுப்பு  தானம் செய்வதன் மூலம்  குறைந்தபட்சம் எட்டு பேரி லிருந்து அதிகபட்சமாக  பன்னிரண்டு பேர் வரையிலும் காப்பாற்ற  முடியும் என்கிறது மருத்துவ உலகம். உறுப்பு தானம் தேவைப்படுபவர்களில் 90 சதவிகிதம் பேர் தேவையான உறுப்பு கிடைக்காததாலேயே உயிரிழப்பு ஏற்பட்டுவிடுகிறது என்கிறது புள்ளிவிவரம்.

இந்தியாவைப் பொறுத்தவரை   ஆண்டுக்கு சுமார் ஐந்து லட்சம் பேர் வரை  உடலில்  முக்கிய உறுப்புகளின்  செயலிழப்பினால்  மரணமடைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு மாற்று உறுப்புகள் கிடைத்தால், அவர்கள்  மீண் டும் தங்களது  வாழ்க்கையைத்  தொடர்ந்து  இந்த பூமியில்  வாழ முடியும்.

உடல் உறுப்பு தானத்தில் இரு வகைகள் இருக்கின்றன. ஒன்று, உயிரோடு இருக்கும்போதே உடல் உறுப்புகளை தானம் செய்வது. இதில், பாதிக்கப்பட்ட வர்களின் உறவுகளே அவர்களுக்காகத் தங்களது உறுப்புகளை தானம் செய் வார்கள். ஒருவரின்  சிறுநீரகம், கல்லீரலின்  ஒரு பகுதி, கணையத்தின்  ஒரு பகுதி என தானம் செய்வார்கள்.

மற்றொன்று இயற்கையாக மரணமடைந்த ஒருவரின் உடல் உறுப்புகளை  கண்கள், இதய வால்வு, தோல், எலும்புகள் ஆகியவற்றை  அவரது  குடும்பத் தாரின்  அனுமதியுடன் தானம் செய்வது. அதுபோன்று  மூளைச்சாவு  அடைந்த வரின் இதயம்,  கல்லீரல், சிறுநீரகம், குடல், நுரையீரல் போன்றவையும்  தான மாக அளிக்கப்பட்டிருக்கிறது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ஆகாரம் கிராமத்தை சேர்ந்த வர் முருகன். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.. இவரது மனைவி கலைச்செல்வி (வயது 46). கூலி வேலை செய்து வந்தார். கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி சாலையில் நடந்து சென்றபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் கலைச்செல்வி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சைபெற்று வந்த அவ ருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க உறவினர்கள் ஒப்புக்கொண்டனர்.

கலைச்செல்வியின் இதயம் சென்னை காவேரி மருத்துவமனைக்கும், ஒரு சிறு நீரகம் சென்னை வேளச்சேரி பிரசாந்த் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறு நீரகம் வேலூர் ஸ்ரீ நாராயணி மருத்துவமனைக்கும், கல்லீரல் மற்றும் 2 கண்கள் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி தொடங்கப்பட்டதில் இருந்து முதல் முறை யாக உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற உடல் உறுப்புகள் தானம் இனிமேல் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

உறுப்பு தானம் பெறக் காத்திருப்போர் விவரம்

இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் வெறும் எட்டு பேர் மட்டுமே உறுப்பு தானம் செய்ய முன்வருவதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

நாட்டில் உடல் உறுப்புகளைத் தானமாகப் பெற 5 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருப்பதாகத் தெரிகின்றது.  இதில் ஆண்டுக்கு 2 லடசம் பேர் சிறுநீகத்துக்கும் 8 ஆயிரம் பேர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கிறார்கள். 15 ஆயிரம் பேர் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கும் நிலையில் 250 பேருக்கு மட்டுமே உறுப்புகள் கிடைக்கின்றன.

மூளைத் தண்டுச் சாவு அடைந்தவரின் உறுப்புகளைத் தானம் அளிப்பதன் மூலம் 8 நபர்களுக்கு வாழ்வளிக்க முடியும். தமிழ்நாட்டில் இதுவரை ஆயிரத்து 422 கொடையாளர்களிடமிருந்து 8ஆயிரத்து 469 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள் ளன.

மூளைத் தண்டு மரணத்தின் மூலம் பெறப்படும் உறுப்புகளை வீணாக்காமல் மருத்துவ காரணங்களுக்காகப் பயன்படுத்த இயலாத உறுப்புகள் தவிர மற்ற அனைத்து உறுப்புகளையும் தேவையுள்ள மரணத் தருவாயில் இருக்கும் நோயாளிகளுக்குப் பயன்படுத்துவதில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது..

உடலுறுப்பு தானத்திலும், உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையிலும் தொடர்ந்த சிறப்புடன் செயல்பட்டுவருவதற்காக இந்திய அரசிடமிருந்து தொடர்ந்து 6 முறை விருதுகள் பெற்று முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...