இயக்குனர் மணிபாரதி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்…

 இயக்குனர் மணிபாரதி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்…

80/ 90 களில் நாகை. பொன்னி எனும் பெயரில் அனைத்து வார, மாத இதழ்களில் நிறைய எழுதி வந்த ஒரு எழுத்தாளர். எழுத்தாளர்கள் மத்தியில் இவர் பெயர் நன்கு பரிட்சயம்.

பாலகுமாரன் நாவல்களால் உந்தப்பட்டு கிட்டத்தட்ட 400 சிறுகதைகள், மூன்று நாவல்கள் மற்றும் ஒரு தொடர்கதை எழுதியிருக்கிறார். நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைப் பட்டினத்துக்குப் படையெடுத்த இவர் திரைச்சுவை பத்திரிகையின் உதவி ஆசிரியராக ஓராண்டு பணியாற்றியபோது உச்சத்தில் இருந்த ரஜினி, கமல், விஜயகாந்த், ராதா, அமலா, ராதிகா போன்ற திரை நட்சத்திரங்களைப் பேட்டியெடுத்தவர்.

சினிமா மீதான ஆர்வத்தால் இயக்குனர் வசந்திடம் உதவி இயக்குனராகச் சேர்ந்து ஆசை, நேருக்கு நேர், பூவெல்லாம் கேட்டுப்பார், ரிதம் போன்ற படங்களில் பணியாற்றிய இவர், இயக்குனர் மணிரத்னம் மற்றும் இயக்குனர் சரண் ஆகியோருடனும் பணியாற்றியவர்.

இவர் இயக்கத்தில் வெளிவந்த ‘அன்பே அன்பே’ எனும் முதல் படமே, யாருக்கும் எளிதில் கிடைக்காத ஏவிஎம் எனும் பெரிய நிறுவனத்தின் தயாரிப்பு.

மணிரத்னம், வஸந்த், சரண், லிங்குசாமி போன்ற திரையுலக ஜாம்பவான்களின் பட்டறைகளில் பட்டை தீட்டப்பட்டவர்.

ஏ.வி.எம் நிறுவனம் சாதாரணமாக யாருக்கும் வாய்ப்பு கொடுத்துவிட மாட்டார்கள். எம்.ஜி.ஆர் கொடிகட்டி பறந்தபோது அவரில்லாமல் வெற்றிப் படங்களைத் தந்தவர்கள். மிகத் தாமதமாகதான் அவரைவைத்து அன்பே வா தந்தார்கள்.

அப்படித்தான் கே.பாக்யராஜ், ஷங்கர் என்று அவர்களின் வெற்றிக்குப் பிறகுதான் அழைப்பார்கள். அப்படியிருக்க இவருக்கு முதல் பட வாய்ப்பு கொடுத்தது ஏ.வி.எம்.

அன்பே! அன்பே! படம் நகைச்சுவைப் படம்! மனோரமா உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்கள் நடித்த படம்!

சிறுகதைகள், கவிதைகள் என்று எழுத்துத்துறையையும் விட்டுவைக்காமல் இயங்குபவர்.

 

தனது அடுத்த படைப்பான ‘அந்த நாள் ஞாபகம்’ படத்துக்குப் பிறகு சின்னத்திரையில் தொடர்ந்து இயங்கியவர். சன் மற்றும் ஜெயா தொலைக்காட்சிகளில் பட்டையைக் கிளப்பிய ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களை இயக்கியவர். சன் தொலைக்காட்சிக்காக திருப்பாவை, அனுபல்லவி, வெள்ளைத் தாமரை ஆகிய தொடர்களையும், ஜெயா தொலைக்காட்சிக்காக ரெங்க விலாஸ் தொடரையும், ஜீ தமிழ் தொலைக்காட்சிக்காக லட்சுமி வந்தாச்சு தொடரையும் இயக்கியுள்ளார். கடந்த ஜூலை 29-ஆம் தேதி வெளியாகி பாராட்டைப் பெற்ற ‘பேட்டரி’ படம் இவரது படைப்பு.

அந்த சாதனை மனிதர் இயக்குனர் மணிபாரதி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்…

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...