வாரிசு – ரொமான்ஸ் செய்யும் விஜய்-ராஷ்மிகா

 வாரிசு – ரொமான்ஸ் செய்யும் விஜய்-ராஷ்மிகா

தற்பொழுது வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பில் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது பல கட்டுப்பாடுகளுடன் சூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் தற்போது வாரிசு திரைப்படத்திலிருந்து வெளியான புகைப்படத்தால் குழுவினர்கள் பெரிதும் அதிர்ச்சியில் இருந்த வருகிறார்கள். அதாவது விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் பொழுது ஏராளமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வந்ததன் காரணமாக படக்குழுவினர்கள் மிகவும் பாதுகாப்பான கட்டுப்பாடுகளை விதித்திறந்தனர். அந்த வகையில் தொடர்ந்து சில காட்சிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவந்த நிலையில் இதுதான் படம் என ஓரளவிற்கு ரசிகர்கள் மத்தியில் தெரியவந்தது.

மேலும் தற்பொழுது இந்த காட்சிகள் வெளியில் வராமல் பாதுகாப்பது மிகப்பெரிய சவாலாக இருந்து வரும் நிலைகள் இயக்குனர் வம்சி இனி படப்பிடிப்பிலிருந்து ஒரு புகைப்படம் கூட வெளிய போகக்கூடாது படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் துணை இயக்குனர்கள் முதல் தொழில்நுட்ப கலைஞர்கள் வரை யாரும் போன் பயன்படுத்தக் கூடாது என கண்டிஷன் போட்டிருந்தார்.

vaarisu

மேலும் இனி வாரிசு படம் சம்பந்தப்பட்ட காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியில் வர வாய்ப்பு இல்லை என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்பொழுது அதிர்ச்சி அலிக்கும் விதமாக விஜய் ராாஷ்மிகா கியூட்டாக ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருவதை பார்த்த குழுவினர்கள் பெரிதும் மகிழ்ச்சியிலிருந்து வருகிறார்கள்.

யார் இவ்வாறு படத்திலிருந்து புகைப்படங்களை எடுத்து லிக் செய்வது என நடிகர் விஜய் முதல் இயக்குனர், தயாரிப்பாளர் என அனைவரும் கடும் கோபத்தில் இருந்து வருகிறார். தற்பொழுது வரையிலும் பத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகிவிட்டது மேலும் தற்பொழுது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...