இந்தியன் 2 வில் விவேக் கதாபாத்திரத்தில் யார்?

 இந்தியன் 2 வில் விவேக் கதாபாத்திரத்தில் யார்?

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக முடங்கி கிடந்த இந்தியன் 2 திரைப்படம் இன்று மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் இதில் இரண்டு முக்கிய மாற்றங்களை செய்துள்ளார் இந்தியன் 2 திரைப்படத்தின் இயக்குனர் ஷங்கர்.

நடிகர் கமல்ஹாசன் மற்றும் சங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது மேலும் இந்த திரைப்படம் பல்வேறு பிரச்சனையின் காரணமாக இரண்டுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக முடங்கி கிடந்தது. அதன் பிறகு இப்படத்தின் தயாரிப்பாளராக உதயநிதி ஸ்டாலின் அவர்களும் இணைந்துள்ளார் இதனால் இந்த படத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு இன்று முதல் படம் தொடங்க உள்ளது.

மேலும் இந்தியன் 2 திரைப்படம் இன்று சென்னையில் எழிலகத்தில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்தியன் 2 திரைப்படத்தில் பாபி சிம்ஹா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார் இவர் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர்கள் கமல்ஹாசன் தற்போது அமெரிக்காவில் உள்ளதால் அவருடைய ஷூட்டிங் அடுத்த மாதம் நடக்கும் என கூறப்படுகிறது.

அதன் பின்னர் இந்திய 2 திரைப்படத்தில் இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்தியன் 2 திரைப்படத்தின் ஆரம்பத்தில் ஒளிப்பதிவாளராக ரத்னவேலு பணியாற்றி வந்தார். இவர் தற்போது வேறு ஒரு திரைப்படங்களில் கமிட்டாகி உள்ளதால் அவரால் இந்த படத்திற்கு வர முடியாமல் போய்விட்டது இதற்காக ஒளிப்பதிவாளராக அந்நியன் படத்தில் ஒளிப்பதிவு செய்த  ரவிவர்மனை இந்தியன் 2 திரைப்படத்திற்காக ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 18 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சங்கர் திரைப்படத்தில் இணைய உள்ளார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். அடுத்ததாக நடிகர் விவேக் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய காட்சிகளில் நடித்துள்ளார் இவர் திடீரென இறந்து விட்டதால் இவருடைய காட்சிகளை நீக்கி விட்டு இவருக்கு பதிலாக மலையாள நடிகரான குரு சோமசுந்தரத்தை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.

மேலும் நடிகர் கமலுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற விவேக்கின் ஆசை இந்தியன் 2 திரைப்படத்தின் மூலம் அந்த ஆசை நிறைவேறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அவர் இறந்து விட்டதால் அவருடைய கடைசி ஆசையையும் நிறைவேறாமல் போனது.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...