சூட்டோடு சூட்டாக அடுத்த படத்தை ரிலீஸ் செய்யும் தனுஷ்.?

 சூட்டோடு சூட்டாக அடுத்த படத்தை ரிலீஸ் செய்யும் தனுஷ்.?

சினிமா உலகில் இருக்கும் நடிகர்கள் பலரும் ஒன்று இரண்டு ஹிட் படங்களை கொடுத்து விட்டால் போதும் அலப்பறை பண்ணுவார்கள் ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவராக இருப்பவர் நடிகர் தனுஷ் இவர் சினிமா உலகில் இருக்கின்ற இடமே தெரியாமல் சைலண்டாக இருந்து கொண்டு நல்ல படங்களை கொடுத்து அசத்தி வருகிறார்.

இவர் நடிப்பில் இப்பொழுது வெளியான திருச்சிற்றம்பலம் படம் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் தனுஷ் உடன் கைகோர்த்து நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர்.

திருச்சிற்றம்பலம் படம் தொடர்ந்து நல்ல வசூலை அள்ளி வருகிறது. இதுவரை மட்டுமே சுமார் 60 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இந்த படம் நிச்சயம் 100 கோடி வசூலை அள்ளும் என பலரும் சொல்லி வருகின்றனர். இந்த திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க மறுப்பக்கம் நடிகர் தனுஷ் கையில் வாத்தி, நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன

இந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக இருக்கிறது அதிலும் குறிப்பாக நானே வருவேன் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவர அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அதனை தொடர்ந்து தனுஷின் வாத்தி திரைப்படம் இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் வெளிவர வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் அதிகாரப்பூர்வமான தகவல் வெகு விரைவில் வெளிவரும் என சொல்லப்படுகிறது. இதை அறிந்த ரசிகர்கள் சூட்டோடு சூட்டாக அடுத்தடுத்த படத்தை இறக்குவது ஒரு நல்ல விஷயம் என பலரும் சொல்லி வருகின்றனர் பட குழுவும்  அதை மனதில் வைத்துக் கொண்டுதான் அடுத்தடுத்த படத்தை  ரிலீஸ் செய்ய முயற்சிக்கிறது என பேசப்படுகிறது.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...