பாதாம், உலர் திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

 பாதாம், உலர் திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

பாதாம் மற்றும் திராட்சையை சும்மா சாப்பிட்டாலே நன்மைகள் இருக்கி றது. நாம் ஏன் வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும் என்று நீங்கள் யோசிக் கலாம்.

பாதாம் மற்றும் திராட்சையில் புரதங்கள், மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம், நார்ச்சத்து உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.

பாதாம் பருப்பில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை நிறைந்துள்ளன. ஊறவைத்த பாதாம் மற்றும் திராட்சையைச் சாப்பிடுவதனால் நாள் முழுவதும் சுறு சுறுப்பாக இருப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தை நிறைவாக வைத் திருக்கவும் உதவுகிறது.

ஊற வைத்த பாதாம் மற்றும் திராட்சையைச் சாப்பிடுவதனால் பெண் களுக்கு மாதவிடாய்  நாட்களில் வரும் வலியிலிருந்து தடுக்கிறது.

தினமும் காலையில் குறிப்பிட்ட அளவில் பாதாம் திராட்சையைச் சாப்பிடு வதால் செரிமான திறனை அதிகரிக்கிறது.

ஊறவைத்த திராட்சை, பாதாம் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

பாதாம் மற்றும் திராட்சையின் ஆக்ஸிஜனேற்றப்  பண்புகள் உடல் ஆரோக் கியத்திற்கு மட்டுமின்றி முடி மற்றும் சருமத்திற்கும் நல்லது.

முடி ஆரோக்கியமாக வளரவும், சருமம் பொலிவாகவும் இருக்க தினமும் ஊறவைத்த பாதாம், திராட்சையைச் சாப்பிட வேண்டும்.

ஊற வைத்து சாப்பிடுவதனால் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத் தைக் குறைக்க உதவுகிறது. இதயத்திற்கும் நல்லது.

ஊறவைத்த பாதாமில் வைட்டமின் பி 17 மற்றும் ஃபோலிக் அமிலம் உள் ளது. அவை புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு உதவுகிறது.

பாதாம் சாப்பிடும் முறை

சிலர் பாதாம் அப்படியே சாப்பிடலாம் என்றும்…. இன்னும் சிலரோ பாதாம் முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் காலை பாதாம் தோலை நீக்கி விட்டுத்தான் சாப்பிட வேண்டும் என்றும் சொல்லப்படுவதுண்டு. அப்படி யானால் வெறும் பாதாமை சாப்பிடுவது பலன் தராதா? பாதாம் எப்படிச் சாப்பிட்டால் நல்லது இப்படி பல கேள்விகள் உள்ளது.

அதிகப்படியான பாதாம் நாம் எடுத்துக் கொள்ளும் போது அது செரிமானம் அடைய அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும். அதோடு பிற உணவுகளை யும் செரிமானம் ஆவதை தடுக்கும். இதனால் மலச்சிக்கல், அஜீரணம் போன்ற தொல்லைகள் ஏற்படக்கூடும் அதனால் அளவோடு உட்கொள்ள வேண்டும்.

ஒரு நாளில் நமக்கு 15மில்லி கிராம் வரையிலான விட்டமின் இ போது மானது. பாதாம் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதால் விட்டமின்-இ நம் உடலில் 1000 மில்லி கிராம் வரையிலும் அதிகரித்து விடும்.

உடலில் பாக்டீரியாவின் வளர்ச்சிக்கு பாதாம் துணை நிற்கும். இதனா லேயே பல நாடுகளில் பாதாம் தீங்கு விளைவிக்கக்கூடியது என்று தடை செய்திருக்கிறார்கள். இதனால் தான் பாதாம் ஊற வைத்து சாப்பிடும் பழக்க மும் வந்திருக்கிறது.

ஒரு அவுன்ஸ் என்றால் 20 முதல் 24 பாதாம் வரையில் சாப்பிடலாம். இதிலிருந்து உங்களுக்கு 160 கலோரியும் ஆறு கிராம் ப்ரோட்டீனும்,14 கிராம் கொழுப்பு, ஐந்து கிராம் ஃபைபர் ஆகியவை கிடைத்திடும். பாதாம் ஊற வைத்தோ வறுத்தோ சாப்பிடாமல் அப்படியே சாப்பிடுவதாக இருந்தால் இந்த அளவு பொருந்தும்.

பாதாம் மட்டும் தனியாகவோ அல்லது பேரீச்சை மற்றும் கிஸ்மிஸ் பழத் துடனோ சேர்த்துச் சாப்பிடலாம். காலையில் பத்து பாதாம் மற்றும் மாலை யில் பத்து என்று எடுத்துக் கொள்ளலாம்.

பாதம் தோலில் அதிகப்படியான டேனின் இருக்கும்.அதாவது பாதாமிற்கு ஒரு பாதுகாப்பு கவசம் போல…. அவ்வளவு எளிதாக பாதாமில் இருக்கக் கூடிய சத்துக்களை வெளிவிடாது. அதனால் தான் அதன் தோலை நீக்கி சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

உலர் திராட்சை

திராட்சைப் பழ வகைகளிலேயே உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பெறப்படுவதுதான் இந்த கிஸ்மிஸ் பழம். இதில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளது. மேலும், விட்டமின் களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற் படாது.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தச்சோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக் கும்.

உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு காய்ச்சி ஆற வைத்து, பழத்தை சாப்பிட்டுவிட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் பிரச்சினை சரியாகும்.

பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை கிடைக்கும்.

தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...