எழுத்துலக முன்னோடி, இதழாளர் நாரண.துரைக்கண்ணன்

 எழுத்துலக முன்னோடி, இதழாளர் நாரண.துரைக்கண்ணன்

சி​று​க​தை​கள்,​​ புதினங்கள்,​​ தலை​வர்​கள் வர​லாறு,​​ நாட​கம்,​​ கவிதை,​​ அர​சி​யல் தலை​யங்​கம் என்று பல்​வேறு இலக்​கி​யத் துறை​க​ளில் சிறந்த எழுத் தாளராகவும் பத்திரிகையாளராகவும் தீவிரமாகச் செயல்பட்ட ஆளுமை நாரண.துரைக்கண்ணனை ‘வாழ்க்கைக் கலைஞர்’ என்று மு.வரதராஜன் போற்றினார்.
இவர் 1906ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் க.வே.நாராயணசாமி, அலர்மேல் மங்கை ஆகியோருக்குப் பிறந்தார். பெற்​றோர் சூட்​டிய பெயர் நட​ரா​சன்.​ ஆனால்,​​ அவர்​கள் ‘துரைக்​கண்ணு’ என்று செல்​ல​மாக அழைத்​த​னர். எழுத்​து​ல​கில் நாரண.துரைக்கண்ணன் என்ற பெயர் நிலை​பெற்​றது. இவரது கல்வி திண்ணைப் பள்ளியிலும், திருவல்லிக் கேணி இந்து உயர்நிலைப் பள்ளியிலும் அமைந்தது. மறைமலை அடிகள் போன்றவர்களிடம் தமிழ் பயின்​றார்.​ 1932ஆம் ஆண்டு,​​ தன் 25வது வய​தில் மீனாம்​பாள் என்ற பெண்​ணைத் திரு​ம​ணம் செய்​து​கொண்​டார்.​ 1982ஆம் ஆண்டில் மனைவி காலமானார்.
வ​ரு​வா​யைப் பெருக்க சில காலம் அடி​சன் கம்​பெ​னி​யில் பணி​யாற்​றி​னார்.​ நாரண துரைக்​கண்​ண​னின் முதல் கட்​டு​ரையே ‘சரஸ்​வதி பூஜை’ என்​கிற பெய​ரில் ​ 1924-ஆம் ஆண்டு சுதேசமித்திரன் இத​ழில் வெளி யானது.
1973ஆம் ஆண்டு சமயம் திருமயிலை சீனிவாச சாஸ்திரி அரங்கில் நிகழ்ந்த இலக்கியக் கூட்டத்தில் நாரண.துரைக்கண்ணன் தமது பேச்சில் தந்த தன்னிலை விளக்கம், பார்வையாளர்களுக்கு அவரது பொருளா தாரச் சூழலைப் புரிய வைத்தது. அதன்பின் ஒளவை நடராஜன் வழிகாட்டுதலில் ’திரு.நாரண.துரைக்கண்ணர் நலவாழ்வு நிதி’ எனும் நிதி திரட்டி அவரை வறுமைச் சூழலில் இருந்து விடுவிக்க முடிவு செய்தனர்.
விடுதலைப் போராட்ட வீரர், வ.உ.சி.க்குத் தொண்டர், சுப்பிரமணிய பாரதிக் குப் புரவலர் என்னும் பன்முகம் கொண்ட பரலி சு. நெல்லையப்பர் மூலம் ‘லோகோபகாரி’ வார இதழில் உதவி ஆசிரியராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தேசபந்து, திராவிடன், தமிழ்நாடு போன்ற பத்திரிகைகளில் பணியாற்றினார். 1932ஆம் ஆண்டு ‘ஆனந்த போதினி’ என்ற இதழின் ஆசிரியரானார். அந்த இத​ழில்​தான் ‘அழ​காம்​பிகை’ என்ற சிறு​க​தையை எழு​தி​னார்.​ அதுவே அவருடைய முதல் சிறு​கதை என்று கூற​லாம்.​
1934ஆம் ஆண்டு ‘பிரசண்ட விகடன்’ ஆசிரியர் பொறுப்பினை ஏற்றார்.
அதில் 32 ஆண்​டு​க​ளுக்குமேல் தொடர்ந்து அதன் ஆசி​ரி​ய​ரா​கப் பணியாற் றினார். அதன்மூலம் பல எழுததாளர்களை உருவாக்கினார்.
வல்லிக்கண்ணன், ஜீவானந்தம், தொ.மு.சி. ரகுநாதன், கு. அழகிரிசாமி, அகிலன், தீபம் பார்த்தசாரதி, லட்சுமி ஆகிய படைப்பாளர்களையும், பாரதி தாசன், கம்பதாசன், வாணிதாசன், சுரதா, தமிழொளி, கவி கா.மு.ஷெரீப், கண்ணதாசன் போன்ற புகழ்பெற்ற கவிஞர்களையும் எழுத் தாளர்களையும் தனது இதழ்களில் எழுத வைத்தார்.

எழுத்தாளர்களின் உரிமைக்கும் போராடியவர். பாரதியார் பாடல்களுக்குத் தனியொருவர் உரிமை கொண்டாடுவது சரியல்ல, அவை நாட்டுடைமை ஆக்கப்பட வேண்டும் என்று உரிமைக்குரல் எழுந்தது. அதற் காக ஆதரவாக ‘பாரதி விடுதலைக் கழகம்’ என்ற அமைப்பில் இவர் தலைவராக இருந்தார்.
1949இல் மகா​கவி பார​தி​யார் இலக்​கி​யங்​களை நாட்​டு​டை​மை​யாக்​கப் போராட ஏற்​பட்ட குழு​வில் முக்​கிய பங்​கு​வ​கித்து வெற்றி பெற்​றார்.​ அதற்​கென ஏற்​பட்ட குழு​வி​னர் சார்​பில் பார​தி​யின் துணை​வி​யார் செல்​லம்​மாளை திரு​நெல்​வே​லிக்​குச் சென்று,​​ கண்டு,​​ ஒப்புதல் கடி​தம் வாங்​கி​னார்.
தமிழ்ச் சிறுகதை மன்னன் எனப் போற்றப்படும் புதுமைப்பித்தனோடு நட்புறவு கொண்டிருந்தார். அவர் இறந்த பிறகு நண்பர்களின் உதவியோடு நிதி திரட்டி, புதுமைப்பித்தனின் மனைவியிடம் ஒரு பகுதியைப் பணமாக வும் மீதித் தொகையைக் கொண்டு சென்னை அண்ணாமலைபுரத்தில் ஒரு வீடும் வாங்கிக் கொடுத்தார்.
தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் தலைவராகவும், கம்பர் கழகத்தில் செய லாளராகவும், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் சென்னை தலைவ ராகவும், தென்னிந்திய பத்திரிகையாளர் பெருமன்றத்தில் துணைத் தலைவ ராகவும், தமிழ்க் கவிஞர் மன்றத்தில் தலைவராகவும் பொறுப்பு கனை வகித்திருந்தார்.
பதினைந்துக்கும் மேற்பட்ட புதினங்கள், கதைகள், நாடகங்கள், கவிதை கள், கட்டுரைகள், ஆராய்ச்சிகள், மொழிபெயர்ப்புகள் உட்பட 130க்கும் மேல் நூல் களை இவர் எழுதியுள்ளார். இவ​ரது நூல்​கள் அர​சு​டைமை ஆக்​கப்​பட்​டுள்ளன.
இந்திய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து தனது பத்திரிகையில் தலை யங்கங்கள், கட்டுரைகளை எழுதினார். ஆங்கிலேய அரசு துரைக்கண்ண னாரைக் கண்டித்து எச்சரிக்கை விடுத்தாலும், ‘எங்கள் கொள்கையை விட மாட்டோம், இது எங்களது தேசியக் கடமை’ எனத் துணிச்சலுடன் அறி வித்தார்.

காந்தியடிகள் ஹரிஜன இயக்கம் தொடங்குவதற்கு முன்பாகவே, தாழ்த்தப் பட்ட மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர், இவர். ‘தீண்டாதார் யார்?’ என்ற சமூகச் சீர்திருத்த நாடகத்தை எழுதினார்.
மகாகவி பாரதியின் பாடல்களை நாட்டுடைமை ஆக்க வேண்டுமென்பதற் காகப் பாடுபட்டவர்களில் முதன்மையானவராகத் திகழ்ந்தார். ‘நற்கலை நம்பி’, ‘இலக்கியச் செம்மல்’ என்னும் பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டது. தனது 90-வது வயதில் 1996-ல் மறைந்தார்.
அன்னாரின் பிறந்தநாள் இன்று. அவரின் தமிழ்ப் பணியைப் பாராட்டுவோம்.

.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...