100 கோடி பாக்ஸ் ஆபிஸ் வரிசையில் திருச்சிற்றம்பலம்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது மித்ரன் ஜகவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம் இந்த திரைப்படம் கடந்த 18ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்று வருகிறது.
அந்த வகையில் சில நாட்களிலேயே 50 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தனுஷ் நடிப்பில் வெளிவந்த சில திரைப்படங்கள் தொடர்ந்து தமிழில் தோல்வியை பெற்று வந்த நிலையில் தற்பொழுது திருச்சிற்றம்பலம் இவரை வெற்றி பெற கொண்டு சென்றுள்ளது. இத்திரைப்படத்தில் தனுஷை தொடர்ந்து நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், ப்ரியா பவானி சங்கர், ராசி கண்ணா ஆகியோர்களின் கூட்டணியில் உருவாகியுள்ளது.
மேலும் தனுஷ் நடிப்பில் வெளிவந்த பழைய படங்களான பொல்லாதவன், படிக்காதவன், யாரடி நீ மோகினி போன்ற திரைப்படங்களை ஞாபகப்படுத்தும் வகையில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே 9.52 கோடி வசூலை பெற்றது. அதன் பிறகு பாசிட்டிவ் விமர்சனங்களால் இரண்டாவது நாளும் 8.79 கோடியும், மூன்றாவது நாள் 10.24 கோடியும்,நான்காவது நாள் 11.03 கோடியும், ஐந்தாவது நாள் 4.16 கோடியும் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.
இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 40 கோடி தான் ஆனால் தற்பொழுது ஐந்தாவது நாள் வசூலில் 43.74 கோடியை பெற்றுள்ளது இவ்வாறு இன்னும் ஒரு சில நாட்களில் 50 கோடியை நெருங்க உள்ள நிலையில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் விரைவில் 50 கோடி வசூலை சேர்த்து 100 கோடியை பெற்று பாக்ஸ் ஆபிஸில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.