மது குடித்து தெருவோரம் மயங்கிக் கிடந்த 3 அரசுப் பள்ளி மாணவிகள்

 மது குடித்து தெருவோரம் மயங்கிக் கிடந்த 3 அரசுப் பள்ளி மாணவிகள்

இந்தியாவிலேயே முதன்முறையாக அரசே ஏற்று நடத்தும் டாஸ்மாக் மதுக் கடையினால் மதுப்பிரியர்கள் மது நோயாளிகளாக மாறி வருகின்றனர் என்பது பெருந்துயரம். மதுவால் வருங்காலச் சந்ததி 90 சதவிகிதம் மதுவால் தாக்கப்பட்டு உடல்நலம், மனநலம் பாதிக்கப்படுவார்கள் என்பதைத் தெரிந்தும் மது விற்ப னைக்காக பண்டிகைகள் விழாக்கள் தோறும் அதிகாரிகள் டார்கெட் பிக்ஸ் செய்து லாரி லாரியாக மது பாட்டில்களை விற்பனை செய்கிறார்கள்.

கேட்க யாரும் வருவதில்லை என்பதால் மதுவின் விலை ஊச்சத்தை எட்டிவிட் டது. அது மட்டுமல்லாமல் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் தண்டம் மூலம் பல கோடிகள் வசூலிப்பதும் பட்டவர்த்தனமாக நடக்கிறது.

பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைக்கும் அரசே ஏற்று நடத்தும் மதுக்கடைகளான டாஸ்மாக் கடைகளின் பெருக்கத்தால் பள்ளிச் சிறார்கள் கல்லூரி மாணவர்கள் வரை சர்வசாதாரணமாகக் குடிகாரர்களாக ஆகிவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதன் மோசமான நிலையாக இன்று (11.8.2022) கரூரில் அரசுப் பள்ளி மாணவிகள் ஒயின் குடித்து தெருவில் ஆடியது கொடூரத்தின் உச்சம்.

திருச்சி மாவட்டம், கரூரில் சீருடை அணிந்த மூன்று பள்ளி மாணவிகள் போதை மயக்கத்தில் தடுமாறி விழுந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கரூர், சர்ச் கார்னர் அருகே மூன்று பள்ளி மாணவிகள் நடுரோட்டில் மது போதை யில் தன்னிலை அறியாமல் தடுமாறிக்கொண்டிருந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சில கடைக்காரர்கள், மாணவிகள் உடல்நலக்குறைவால் இப்படி ஆகி யிருக்கலாம் என்று நினைத்து  உடனே 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் அளித் தனர். ஆம்புலன்ஸை கண்டதும் ஒரு மாணவி சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து நழுவிச் சென்றுவிட்டார். மற்ற இரண்டு மாணவிகளால் நகர முடியவில்லை.

இதை அடுத்து அவர்கள் அருகில் சென்று பார்த்தபோதுதான் மாணவிகள் மது போதையில் திளைத்திருப்பது தெரிந்தது.  மாணவிகள் இரண்டு பேரையும் பொது மக்கள் ஆம்புலன்சில் ஏற்றி கரூர் அனைத்து மகளிர் போலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

போதை மயக்கத்தில் தடுமாறிய அந்த மூன்று  மாணவிகளும் கரூர் மாநகரி லுள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகின்றனர். மூன்று பேரும் இணைபிரியா தோழிகள். அவர்கள் தேர்வில் தோல்வி அடைந்த நிலையில் மறு தேர்வு எழுதுவதற்காகச் சீருடையில் வேறொரு பள்ளிக்கு வந்துள்ளனர்.

தேர்வை எழுதிய மகிழ்ச்சியில் வெளியில் வந்த அவர்கள் நீண்ட நேரமாகப் பேசிக்கொண்டு இருந்தனர். இந்த நிலையில் ஒயின் குடித்தால் மேலும் வெள்ளை நிறமாக மாறலாம் என்று கேள்விப்பட்டு யரோ தெரிந்த ஒருவர் மூலமாக டாஸ்மாக் கடையில் ஒயின் வாங்கி மூன்று பேரும் குடித்துள்ளனர். பின்னர் வழக்கம்போல் வீடுகளுக்குப் புறப்பட்டுச் செல்ல முயன்றனர். ஆனால் செல்லும் வழியில் போதை தலைக்கேறி தடுமாறி இருக்கிறார்கள்.

மயங்கிய நிலையில் இருந்த அந்த இரண்டு மாணவிகளிடம் போலிசார் விசாரித்தபோது தெரியாமல் குடித்துவிட்டதாக அந்த மாணவிகள் போலீசாரிடம் அழுது புலம்பினர்.

போதையில் சுதாரித்துக்கொண்டு ஓடிய அந்த மாணவியையும் போலீஸ் நிலை யத்திற்கு அழைத்து வந்தனர்.  மூன்று மாணவிகளின் பெற்றோரையும் அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் எதைக் காட்டுகிறது? நாட்டில் மது கலாசாரம் சாதாரணமாகப் பரவி விட்டதைத்தானே காட்டுகிறது. தள்ளாடும் தமிழகம் என்று மீளுமோ?

மூலவன்

Leave a Reply

Your email address will not be published.